உயர் மதிப்பிலான ருபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி,அறிவித்த்தையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்கட்சி உறுப்பினர்கள் செயல்படவிடாமல் தடுத்து வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில ஈடுபட்டு வருகின்றனர்,

இன்று நாடாளுமன்றம் தொடங்கியவுடன் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையின் நடுவே வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது ருபாய் நோட்டு விவகாரம் குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என முழக்கமிட்டனர். தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை ஒத்திவைத்த்தார்.

இதேபோன்று மாநிலங்களவையிலும் ருபாய் நோட்டு தொடர்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது


முன்னதாக ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். ரூபாய் நோட்டு பிரச்சினையை தீர்க்க கோரி அவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் துணைத் தலைவர் திரு ராகுல்காந்தியும் இதில் பங்கேற்றார்.