2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் : -

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்

விவசாயிகள் பயிர்கடன் 10 லட்சம் கோடி வழங்கப்படும்

பயிர் காப்பீட்டு பரப்பு 50% ஆக விரிவுபடுத்தப்படும்

2018ம் ஆண்டு மே 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தப்படும்.

கிராமங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க திட்டம்

பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 1 கோடி குடும்பங்களை முன்னேற்ற புதிய திட்டம்

கிராமங்களை மேம்படுத்த ஆண்டுதோறும் 3லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது..

தொழில்நுட்ப இந்தியா என்பதே எங்களின் இலக்கு...

பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13000 கோடி வழங்கப்படும்

பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்க முடிவு..

விவசாய கடனாக சுமார் ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு...

நேர்மையாக வரி செலுத்துவோர் கௌரவிக்கப்படுவர்

ரயில்வே துறை சுதந்திரமாக இயங்கும்..

பணமதிப்பு ஒழிப்பு நடவடிக்கையால் அடுத்த ஆண்டு மிக பெரிய வளர்ச்சி ஏற்படும்.

விவசாயிகள் வருமானத்தை 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்த திட்டம்.

கச்சா எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் இருக்கும் உறுதியற்ற நிலைதான் பெரிய சேலஞ்ச்

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு

விளைபொருளுக்கு நல்லவிலை கிடைக்க குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் கடன்களுக்கான காலம் 15 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்

கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு-ஜேட்லி

கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1,17,000 கோடி(கடந்த ஆண்டு ரூ.87,765 கோடி)

2018-ம் ஆண்டு மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீத மின்வசதி

திட்டத்துக்கான நிதி 2017-2018காக 48,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-2017ல் 37,000 கோடி ரூபாயாக இருந்தது

திறந்த வெளியில் மலம் கழிப்பவர்கள் இல்லாத கிராமங்களுக்கு பைப் மூலமாக நீர் சப்ளை கொடுக்க அதிக முக்கியத்துவம் தரப்படும்

அரசின் நடவடிக்கையால் வீட்டுக் கடன் வட்டி ஏற்கனவே குறைந்து வருகிறது

உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தனி அமைப்பு

சிபிஎஸ்இ நுழைவுத் தேர்வுகளை நடத்தாது

பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ரூ. 1,84,000 கோடி(கடந்த ஆண்டு ரூ.1,56,000 கோடி)

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க ரூ.9000 கோடி ஒதுக்கீடு

மருத்துவ சேவையை பரவலாக்க கூடுதல் மருத்துவ இடங்கள் ஏற்படுத்தப்படும்

ஆர்சனிக் மற்றும் ஃபுளோரைடால் பாதிக்கப்பட்ட 28 ஆயிரம் வாழ்விடப் பகுதிகளுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் சுத்தமான குடிநீர்

மருத்துவ சாதனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்