பாஸ்போர்ட் வழங்குவதை எளிமை படுத்த தலைமை தபால் அலுவலகங்களில் பாஸ் போர்ட் வழங்கும் நடைமுறையை வகுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் பெறுவதில் பலவித நடைமுறை சிக்கல்கள் உள்ளன இதை கலியும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு இடத்தில் குவிந்திருந்த அலுவலக நடைமுறைகளை மாற்றி பல மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனாலும் மாறி வரும் கால கட்டத்தில் கோடிக்கணக்கானோர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பாஸ்போர்ட் பெறுவதை எளிமைபடுத்தும் வகையில் இனி பாஸ்போர்ட்டுகளை தலைமை தபால் நிலையங்களில் வழங்கும் முறையை கொண்டுவர உள்ளதாக பட்ஜெட்டில் ஜேட்லி அறிவித்துள்ளார்.
