பட்ஜெட் கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்‍கை தெரிவித்துள்ளார். 

அனைத்துக்‍ கட்சித் தலைவர்களுடனும் இதுதொடர்பாக தாம் ஆலோசனைநடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. 

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்‍கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 

பட்ஜெட் கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமையும் என்றும், முக்‍கிய பிரச்னைகள் குறித்து

ஆக்‍கப்பூர்வமான விவாதம் நடைபெறும் என்றும் நம்பிக்‍கை தெரிவித்தார்.

இதுதொடர்பாக தாம் அனைத்துக்‍ கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதேபோன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் முக்‍கியத்துவம் கருதி அனைத்துக்‍ கட்சி 

உறுப்பினர்களும் ஆக்‍கப்பூர்வமான அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட வேண்டும் என நாடாளுமன்ற 

விவகாரத்துறைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்‍க அரசு தயாராக இருப்பதாகவும், மறைப்பதற்கு எதுவும் 

இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.