மேஜர் ராமசாமி பரமேஸ்வரன்: பரம் வீர் சக்ரா விருது பெற்ற தமிழரின் வரலாறு
பரம் வீர் சக்ரா விருது பெற்ற இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை அந்தமான் தீவுகளுக்குச் சூட்டியதற்கு ராணுவ வீரர் பாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தின் பகுதியாக உள்ள தீவுகளில் இதுவரை பெயரிடப்படாமல் உள்ள 21 பெரிய தீவுகள் உள்ளன. ராணுவ வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் அந்தத் தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயரைச் சூட்ட மத்திய அரசு முடிவு செய்த்து. இதன்படி, இன்று நடைபெற்ற அரசு விழாவில் 21 தீவுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி 21 ராணுவ வீர்கள் பெயரைச் சூட்டினார்.
இந்த 21 ராணுவ வீரர்களில் ஒருவரான ராமசாமி பரமேஸ்வரன் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி மும்பை நகரத்தில் பிறந்தார். ராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் வென்று, 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராணுவத்தின் மகர் ரெஜிமெண்டின் 15-வது பட்டாலியனில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
இது வீர சாவர்க்கர் மண்!: அந்தமானில் 21 தீவுகளுக்கு பெயர் சூட்டி பிரதமர் மோடி உரை
ஈழப் போரின்போது இந்திய அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்தார். அப்போது பல வீரதீரச் செயல்கள் புரிந்த பரமேஸ்வரன் நவம்பர் 1987ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்.
மேஜர் பரமேஸ்வரன் மறைவுக்குப் பின்பு 1988ஆம் ஆண்டில் அவரது ராணுவ சேவையைப் பாராட்டி, பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில், சென்னை ஆற்காடு சாலையில் முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு கட்டடத்துக்கு மேஜர் பரமேஸ்வரன் விகார் என்று பெயரிடப்பட்டது.
சென்னையின் சைதாப்பேட்டையில் உள்ள ஶ்ரீநகர் காலனியில் செயல்பட்டுவரும் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க கட்டடத்திற்கும் மேஜர் பரமேஸ்வரன் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் வளாகத்தில் பரம் வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு மேஜர் பரமேஸ்வரனின் மார்பளவுச் சிலையும் உள்ளது.
பிரதமர் மோடிக்கு நன்றி கூறும் ராணுவ வீரராக நடித்த பாலிவுட் நடிகர்கள்