Asianet News TamilAsianet News Tamil

#Breaking: 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு... பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது!!

2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

padma awards announced by central government
Author
India, First Published Jan 25, 2022, 9:05 PM IST

2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.  இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

padma awards announced by central government

4 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  மறைந்த உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூகுல் நிறுவன சி.இ.ஒ. சுந்தர்பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஒ. சத்யா நாதெல்லாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

padma awards announced by central government

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக செயற்பட்டாளர் தாமோதரன், இசைக்கலைஞர் ஏகேசி நடராஜன், முத்துகண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவாக்சின் கண்டுபிடித்த கிருஷ்ணா எல்லா மற்றும் அவரது மனைவிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios