மலாலாவும் யூசுப்சாய் பாகிஸ்தானில் தான் தாக்கப்பட்டார் என்பதை நினைவூட்டினார். தலிபான்கள் தாக்குதலுக்கு பிறகு மலாலா வேறு நாட்டில் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறினார். ஆனால், தங்களுடைய மகள்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். இங்கேயேதான் படிக்கிறார்கள். 

ஹிஜாப் விவகாரத்தில் பரிகஸ்தான் தலையிட வேண்டாம் என்றும் எங்கள் உள்நாட்டு பிரச்சனையை நாங்களே தீர்த்துக்கொள்வதாக ஆசாருதீன் ஓவைசி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர். ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, காவித் துண்டுகள் அணிந்து ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் வலம் வரும் மாணவர்களுக்கு பதிலடியாகவும், முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாகவும் நீலத் துண்டு அணிந்து ஜெய் பீம் கோஷத்துடன் சில மாணவர்கள் வலம் வந்தனர். அத்துடன், புர்கா அணிந்து வந்த மாணவி ஒருவரைச் சுற்றி, காவித் துண்டு அணிந்த மாணவர் கூட்டம் ஒன்று ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய சம்பவமும் வீடியோ வடிவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனால், சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில்தான், கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி டுவிட்ட பதிவில்;- ஹிஜாப் அணிந்ததற்காக அவர்களைப் பயமுறுத்துவது, முற்றிலும் அடக்குமுறையாகும். இது முஸ்லிம்களை அடக்க நினைக்கும் இந்திய அரசு திட்டத்தின் ஒரு பகுதி என்பதை உலகம் உணர செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிப்புத்துறை அமைச்சர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்தியாவில் நடப்பது திகிலுட்டும் வகையில் உள்ளது. இந்திய சமுதாயம் நிலையற்ற தலைமையில் கீழ் அதிகவேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஹிஜாப் அணிவது தனிப்பட்ட விருப்பம். எந்த ஆடை அணிய வேண்டும் என குடிமக்களுக்கும் தேர்வு செய்ய உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் அமைச்சர்களின் கருத்துக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக ஒவைசி கூறுகையில்;- நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த ஹிஜாப் விவகாரம் பாஜக-வின் வெறுப்பு அரசியலையே காட்டுகிறது. பாஜ.கவின் இந்த அரசியலை ஹிஜாப் அல்லது முஸ்லிம்களுடன் இணைக்காதீர்கள். அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள தங்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் என்று கூறியுள்ளார். 

மேலும் ஹிஜாப் விவகாரத்தில், பாகிஸ்தானிலிருந்து வரும் ஆதரவு குறித்துப் பேசிய ஒவைசி, இங்கு என்ன பிரச்சனை நடக்கிறது என்று பார்க்காதீர்கள், உங்கள் நாட்டுப் பிரச்னைகளை கவனியுங்கள். மலாலாவும் யூசுப்சாய் பாகிஸ்தானில் தான் தாக்கப்பட்டார் என்பதை நினைவூட்டினார். தலிபான்கள் தாக்குதலுக்கு பிறகு மலாலா வேறு நாட்டில் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறினார். ஆனால், தங்களுடைய மகள்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். இங்கேயேதான் படிக்கிறார்கள். ஜின்னாவின் பெயரை ஒரு நாளும் நாங்கள் உச்சரிக்கமாட்டோம் என்றார். இம்ரான்கான் அரசை எதிர்த்து பலுசிஸ்தானில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. முதலில் பலுசிஸ்தான் பிரச்சனைக்கு பாகிஸ்தான் தீர்வு காணட்டும். இது எங்கள் நாடு, எங்கள் பிரச்னை இதில் பாகிஸ்தான் மூக்கை துழைக்க வேண்டாம் என்று அசாதுதீன் ஒவைசி கருத்தை தெரிவித்துள்ளார்.