Asianet News TamilAsianet News Tamil

உச்சத்தை தொட்ட ஆன்லைன் பரிவர்த்தனை - மத்திய அரசு அறிவிப்பு

online payment-ewallet
Author
First Published Dec 11, 2016, 1:10 PM IST


உயர்பண மதிப்பு செல்லாது என பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் பணப் புழக்கம் குறைந்துள்ளது. பணம் கொடுத்து பொருட்கள் வாங்கும் முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு டெபிட், கிரடிட் கார்டுகள் மற்றும் இ வாலட் முலம் நடத்தப்படும் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

online payment-ewallet

இந்நிலையில் இ வாலட் முறையில்  இது வரை 17 லட்சம் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 63 லட்சம் பணப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணப்பரிமாற்றங்கள் 271 சதவீதம் அதிகரித்துள்ளது.

online payment-ewallet

நாள்தோறும் சராசரியாக 52 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்று வந்த பணப்பரிமாற்றம், தற்போது இ வாலட் மூலம் 191 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோன்று ரூபே வாலட் மூலம் நாள்தோறும் 16 லட்சம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 503 சதவீதம் அதிகரித்து  236 கோடி ரூபாய்க்கு பணப்பறிமாற்றம் நிகழ்வாதாக குறிப்பிடப்பட்டுள்ளது,
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios