கடந்த 2019-ம் ஆண்டில் ரயலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகளிடம் இருந்து ரூ.1.50கோடி அபராதம் வசூலித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ரயிலில் 2019ம் ஆண்டு மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள் மற்றும் முறைகேடாக பயணம் செய்தவர்கள் என்று மொத்தம் 37.64 லட்சம் வழக்குகளில் அபராதமாக 192.51 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் ரயில்வேயில் பறக்கும் படையில் டிக்கெட் பரிசோதகராக இருப்பவர் எஸ்.பி.கலாண்டே மட்டும் ரூ.1.51 கோடி வசூலித்துள்ளார். எஸ்.பி.கலாண்டே டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் அபராதம் வசூலித்ததில் முதிலிடத்தில் உள்ளார். உள்ளூர் மற்றும் நீண்ட தூர ரயில்களில் டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து அபராதம் வசூலிக்க பயண டிக்கெட் ஆய்வாளர்களுக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் கலாண்டே 22,680 டிக்கெட் இல்லாத பயணிகளைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து ரூ.1.51 கோடி அபராதமாக வசூலித்து ரயில்வேக்கு வழங்கியுள்ளார்.

இவருக்கு அடுத்து எம்.எம்.ஷின்டே, டி.குமார் மற்றும் ரவி குமார் ஆகியோரும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ. 1 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலித்துள்ளனர். 

இவர்களில் கலாண்டே, ஷிண்டே, டி.குமார் இவர்கள் நெடுந்தூரம் செல்லும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகராக உள்ளனர். ரவிகுமார் மும்பை புறநகர் ரயில்களில் டிக்கெட் பரிசோதகராக உள்ளார்.


16,035 டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து ரூ.1.07 கோடியை ஷிண்டே அபராதமாக வசூலித்துள்ளார்,  டி.குமார் 15234 பயணிகளிடமிருந்து ரூ.1.02 கோடியும், ரவி குமார் 20,657 பயணிகளிடமிருந்து ரூ.1.45 கோடியும் வசூலித்தனர்..