பழைய நோட்டுக்கள் 5000 ரூபாய் வரை மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்ய முடியும்…ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது.

பின்னர் வங்கியில் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் இம்மாதம் 30 தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்துபவர்கள் பான் கார்டு காட்ட வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி இனிமேல் 5000 ரூபாய் மட்டுமே வங்கியில் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய முடியும்.

அதுவும் இம்மாத இறுதி வரை ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்யமுடியும் என்றும் ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.