எலக்ட்ரானிக் இன்டர்லாக் தான் ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம்: ரயில்வே அமைச்சர் விளக்கம்

எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றம் காரணமாகவே ஒடிசா ரயில் விபத்து நடந்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Odisha Train Accident happened due to change in electronic interlocking: Railways Minister Ashwini Vaishnaw

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்வண் இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என்று நேற்று கூறி இருந்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரயில்வே அமைச்சர் விபத்து நடந்த களத்திற்குச் சென்று சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

அமித் ஷா, ஜே.பி. நட்டாவுடன் சந்திரபாபு நாயடு சந்திப்பு; தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா?

Odisha Train Accident happened due to change in electronic interlocking: Railways Minister Ashwini Vaishnaw

இதனிடையே இன்று பேட்டி அளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "இந்த விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று களத்திற்கு வந்து பார்வையிட்டார். இன்று பாதையை மீட்டெடுக்க முயற்சிப்போம். அனைத்து உடல்களும் அகற்றப்பட்டுள்ளன. புதன் காலைக்குள் இந்தப் பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கும் வகையில் சீரமைப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு." என்று கூறியுள்ளார்.

"இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை தரவேண்டும். ஆனால் சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம். மின்னணு இன்டர்லாக் மாற்றத்தால் தான் இந்த விபத்து நடந்தது. தற்போது எங்கள் கவனம் மீட்புப் பணிகளில்தான் உள்ளது" என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டுக்குள் கவச் தொழில்நுட்பம் முழுமையாக செயல்படுத்தப்படும்: ரயில்வே உறுதி

Odisha Train Accident happened due to change in electronic interlocking: Railways Minister Ashwini Vaishnaw

கவச் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாததுதான் மிகப்பெரிய விபத்துக்குக் காரணம் என்றும் அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருந்தால் விபத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுவதற்கு பதில் அளித்த அமைச்சர், "கவச் தொழில்நுட்பத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும், "மம்தா பானர்ஜி நேற்று சொன்னது விபத்துக்கான காரணம் அல்ல. எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றம் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது." என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரயில் விபத்துகள் நேர்வதைத் தடுக்கும் கவச் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா சொல்லி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் மூலம் எல்கேஜி ப்ரெண்டை 18 வருஷம் கழித்து சந்தித்த பெண்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios