இன்ஸ்டாகிராம் மூலம் எல்கேஜி ப்ரெண்டை 18 வருஷம் கழித்து சந்தித்த பெண்!
தனது குழந்தை பருவ தோழியை மீண்டும் சந்திக்க விரும்பிய ஒரு பெண் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி அவரைத் தேடத் தொடங்கினார். இப்போது அவரது இந்தத் தேடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நேஹா என்ற பெண், தனது LKG தோழியான லக்ஷிதாவைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தனி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கினார். தான் பார்க்க விரும்பும் குழந்தைப் பருவத் தோழியின் முழுப் பெயரைக்கூட அவரால் நினைவுகூர முடியவில்லை. அந்தக் கணக்கிற்கு @finding_Lakshita என்று பெயரிட்டு தன்னிடம் இருந்த ஒரே ஒரு குழந்தைப்பருவ படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பயோவில் தன் தோழியைப் பற்றி சில தகவல்களையும் குறிப்பிட்டிருந்தார். "நீண்டகாலத்துக்கு முன் தொலைந்து போன என் பால்யகால தோழி லக்ஷிதா. வயது 21. அவளது சகோதரன் குணால். இருவரையும் கண்டுபிடிக்கும் பணியில் இருக்கிறேன்" என்று அவர் எழுதி இருந்தார்.
நேஹா இன்ஸ்டாகிராமில் தனது தோழியின் பெயரில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு விசாரிக்கத் தொடங்கினார். இறுதியில், லக்ஷிதாவைக் கண்டுபிடித்துவிட்டார். லக்ஷிதாவே நேஹாவின் பதிவைப் பார்த்துவிட்டு அவரைத் தொடர்புகொண்டார். இருவரும் இணைந்ததுவிட்டதால், @finding_lakshita பக்கத்தை புதுப்பித்துள்ளார்.
பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கச் சொன்ன உ.பி. உயர் நீதிமன்றம்... தடை போட்டது உச்ச நீதிமன்றம்!
"தேடும் பணி வெற்றிகரமாக முடிந்தது. கடைசியில் நான் அவளைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்று வீடியோவுடன் பதிவிட்டிருக்கிறார். "இறுதியாக!!! நான் உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன். உன்னைக் கண்டுபிடிப்பது எளிதாக இல்லை. ஆனால் எப்படியோ நான் கண்டுபிடித்துவிட்டேன். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு உன்னைத் தொடர்புகொள்வது நம்பமுடியாததாக இருக்கிறது" என்றும் எழுதியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையில் தவறான பெயர் பலகை! வழிமாறி சென்று அவதிப்படும் வாகன ஓட்டிகள்!
"எனக்கு எல்கேஜியில் (2006) லக்ஷிதா என்ற பெயருடைய ஒரு தோழி இருந்தாள். அவள் ஜெய்ப்பூருக்குச் சென்றுவிட்டதால், அவளுடனான தொடர்பை இழந்துவிட்டேன். அவளுடைய குடும்பப்பெயர் கூட எனக்கு நினைவில் இல்லை..." என்று அவர் தெரிவிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் நேஹாவின் இந்தப் பதிவு வைரலாக பரவி வருகிறது. 70 லட்சம் பேருக்கு மேல் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். 756,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை இந்தப் பதிவு அள்ளி இருக்கிறது. இந்தப் பதிவில் கமெண்ட் செய்த லக்ஷிதா, "நீ என்னை அழ வைத்துவிட்டாய்" என்று கூறியுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த பலரும் நெகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
"நானும் என் பால்யகால தோழியை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது படம் கூட என்னிடம் இல்லை. நான் அவளை விரைவில் கண்டுபிடிப்பேன் என நினைக்கிறேன்" என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். "இறுதியாக ஒரு விலைமதிப்பற்ற ரீல் கிடைத்திருக்கிறது" என்று கருத்து தெரிவித்தார். "சில நேரங்களில் சமூக ஊடகங்கள் சிறப்பாக உதவி செய்கின்றன" எனவும் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் லைட்ஹவுஸ்கள்! இலவசமாகவும் கிடைக்குமாம்!