2024ஆம் ஆண்டுக்குள் கவச் தொழில்நுட்பம் முழுமையாக செயல்படுத்தப்படும்: ரயில்வே உறுதி
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கவச் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என அமிதாப் சர்மா உறுதி கூறியுள்ளார்.
ரயில் விபத்துகள் நேர்வதைத் தடுக்கும் கவச் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்கள் மோதிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக டி.சி.ஏ.எஸ். (TCAS) என்ற கருவி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2014ஆம் ஆண்டு பாஜக அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி கவச் என்று பெயர் வைத்தது. வெள்ளிக்கிழமை ஒடிசாவில் நேர்ந்த மூன்று ரயில்கள் விபத்தில் இந்த கவச் தொழில்நுட்பம் பயன்படுத்தாதுதான் காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
இன்ஸ்டாகிராம் மூலம் எல்கேஜி ப்ரெண்டை 18 வருஷம் கழித்து சந்தித்த பெண்!
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா விளக்கம் அளித்துள்ளார். டி.சி.ஏ.எஸ். என்பது பழைய தொழில்நுட்பம் என்றும், அது தானியங்கி பிரேக்குடன் செயல்பட்டது என்றும் கூறினார். ஒரே தண்டவாளத்தில் வரும் ரயில்கள் விபத்துக்குள்ளாவதையே டி.சி.ஏ.எஸ். தொழில்நுட்பம் தானியங்கி பிரேக் மூலம் தடுக்கும் என்று அரவ் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் சிவப்பு விளக்கு எச்சரிக்கையை மீறி ரயிலை இயக்கினால் டிசிஏஎஸ் தொழில்நுட்பம் வேலை செய்யாது என்று குறிப்பிட்ட அமிதாப் சர்மா, கடந்த ஆண்டு சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட கவச் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் எனவும் உறுதி கூறியுள்ளார்.
விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம்.. விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி உத்தரவு
ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்துக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
விபத்துக்குள்ளான ரயில்களில் பயணித்த தமிழர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய தமிழ்நாடு சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்துக்குப் பின் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் 14 வகை மருந்துகளுக்கு தடை போட்ட மத்திய அரசு - எவை தெரியுமா?