Asianet News TamilAsianet News Tamil

மாற்றுத் திறனாளிகளும் ‘ஹஜ்’ புனிதப் பயணம் செல்லலாம் 60 ஆண்டுகால தடையை நீக்குகிறது மத்திய அரசு

now onwards handicapped would also perform haj pilgrimage
now onwards handicapped would also perform haj pilgrimage
Author
First Published Jan 7, 2018, 5:19 PM IST


முஸ்லிம்களின் ‘ஹஜ்’ புனிதபயணத்துக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி கிடையாது என்ற 60 ஆண்டுகால நடைமுறைகளை ரத்து செய்து, அவர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் உரிமை குழு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடத்திய போராட்டம், மத்திய சிறுபான்மை நலத்துறைக்கு விடுத்த கோரிக்கையையடுத்து இந்த முடிவு அரசு அறிவிக்க உள்ளது.

60 ஆண்டுகளாக

ஹஜ் குழுவின் விதிமுறைகளில் கடந்த 60 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் விதிமுறைகளில், “போலியோ, காசநோய், இதயநோய், நுரையீரல் தொடர்பான நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர், தொழுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ’’ ஆகியோர் ஹஜ் புனிதப் பயணத்துக்கு அரசிடம் விண்ணப்பிக்க முடியாது.

கோரிக்கை

இந்நிலைில், இந்த விதிமுறையை மாற்ற வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுப்பது என்பது, அடிப்படை உரிமைகளை மீறியதாகும். சவூதி அரேபியா அரசு கூட முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிகமான வசதிகளை செய்து தரும்போது, மத்திய அரசு அனுமதிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று மாற்றித்திறனாளிகள் உரிமைக் குழுவினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

 சந்திப்பு

மாற்றுத்திறனாளிகள் உரிமைக் குழு ஆர்வலர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே. ரங்கராஜன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய சிறுபான்மை நலத்துறைஅமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியைச் சந்தித்து இது தொடர்பாக முறையிட்டனர்.

மேலும், 2018-22ம் ஆண்டுக்குரிய புதிய ஹஜ் கொள்கையிலும் மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதையும் நீக்க வேண்டும்.அது தவறானவை எனவும் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

அமைச்சர் உறுதி

அது குறித்து முரளிதரன் கூறுகையில், “ ஹஜ் பயனத்துக்குமாற்றித்திறனாகளுக்கு அனுமதி இல்லை என்ற விதிமுறை நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், யாரும் இதன் மீது கவனம் செலுத்தவில்லை. இப்போது என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது, விரைவில் தடை நீக்கப்படும் அமைச்சர்  உறுதியளித்தார். தேவைப்பட்டால் சவூதி அரேபியா அரசிடமும் பேசி இந்த ஆண்டில் இருந்து மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் ’’ எனத் தெரிவித்தார்.

அனுமதிக்கப்படுவார்கள்

இது குறித்து மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், “ கடந்த 60 ஆண்டுகளாக ஹஜ் விதிமுறைகளில் இந்த தடை இருந்து வருகிறது. சவூதி அரேபியாவில் கூட இதுபோன்ற விதிமுறைகள் இருந்து இருக்கலாம். எப்படியானாலும், இந்த ஆண்டில் இருந்து ஹஜ் பயணம் செல்ல மாற்றித்திறனாளிளும் விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios