கேரளாவில் கடந்த 10 நாட்களாக காட்டுத்தனமாக பெய்த மழையில் கிட்டத்தட்ட 14 மாவட்டங்கள் முற்றிலும் மூழ்கியது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில், வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. ஆனால் அனைத்து வீடுகளுமே சேறாலும் சகதியாலும் மூழ்கிக் கிடக்கிறது. வீட்டுக்குள் சென்ற மக்களை பாம்புகளும், தேள்களும் வரவேற்கின்றன.

கடவுளின்தேசம்என்றுவர்ணிக்கப்படும்கேரளாவில், தென்மேற்குபருவமழைநூறாண்டுகளில்இல்லாதஅளவுக்குகொட்டிதீர்த்தது. இதன்காரணமாகமாநிலத்தின்அனைத்து அணைகளும்திறக்கப்பட்டன. தொடர்மழையால்மாநிலமேவெள்ளத்தில்மூழ்கியது. கேரளாவின்மொத்தமக்கள்தொகை 3.48 கோடியில், 40 சதவீதம்பேர்வெள்ளத்தால்கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசியபேரிடர்மீட்புப்படை, கடலோரகாவல்படை, துணைராணுவப்படைவீரர்கள்மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்மாநிலத்தின்மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள்மழையால்பாதிக்கப்பட்டுள்ளன.

8 லட்சம்பேர்நிவாரணமுகாம்களில்தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 8 லட்சம்பேர்இடம்பெயர்ந்துள்ளனர். 8,000 வீடுகள்இடிந்துள்ளன. 26,000 வீடுகள்சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர்பயிர்கள்முற்றிலும் அழுகி நாசமாகியுள்ளன. 134 பாலங்கள்இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள்சேதமடைந்துள்ளன..21,000 கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதாரஇழப்புஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 400 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவல்களை கேரள அரசு அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்தசிலநாட்களாககொட்டித்தீர்த்தகனமழைசற்றுஓய்ந்துள்ளது. இதனால் இன்று கேரளாவில் இயல்புநிலைமெல்லமெல்லதிரும்பிவருகிறது.

கேரளாவின் பலபகுதிகளிலும்ரயில்மற்றும்பேருந்துபோக்குவரத்துதொடங்கியுள்ளது. பல இட்ங்களில் ஆட்டோக்கள் ஓடின. ஆனால் பெட்ரோல் பங்க்குகள் முழுமையாக செயல்படவில்லை. நிலைமைசீரடைந்துவரும்பகுதிகளில்மின்சாரஇணைப்புவழங்கப்பட்டுவருகிறது. தொலைபேசி இணைப்புகள் தற்போது கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஏடிஎம் மையங்கள் இன்று ஒரு சில இடங்களில் செயல்பட்டன. இதன் முன்பு பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்துச் சென்றனர். மூடப்பட்ட கொச்சிவிமானநிலையம் இன்று செய்லபடத் தொடங்கியுள்ளது. அங்குள்ளகடற்படைவிமானதளத்தில்இருந்து பயணிகள்விமானபோக்குவரத்து தொடங்கியுள்ளது.

இதனிடையே கடந்த ஒரு வாரமாக தண்ணீருக்குள் மூழ்யிருந்த வீடுகளில் இருந்து தண்ணீர் தற்போது வடியத் தொடங்கியுள்ளது.

தற்காலிக முகாம்களில் இருந்து பொது மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் வீடுகளுக்குச் சென்று அவற்றை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர். வீடுகளுக்குள் 2 அடி உயரத்துக்கு சேறும், சகதியும் குவிந்து கிடக்கின்றன. அவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் அனைத்து நாசமாகியுள்ளன.

டி.வி. ஃபிரிட்ஜ் வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் இனி பயன்படுத்த முடியாதபடி வீணாகிப் போயுள்ளன. வீட்டைச் சுற்றியிருந்த மரங்கள் எல்லாம காணாமல் போயிருந்தன. ஒரு சில பகுதிகளில் பக்கத்து வீடே காணாமல் போயிருந்தது.

பல வீடுகளில் பாம்புகளும், தேள்களும் பொது மக்களை வரவேற்றன. இதையடுத்து அதிர்ந்து போன பொது மக்கள், அவற்றை வெளியேற்றினர்.

தங்கள் வீடுகளின் நிலை குறித்து கேரள மக்கள் அதிர்ச்சி அடைந்தாலும், கொஞ்சம் கூட மனம் தளராமல் வீட்டை சுத்தம் செய்து தங்களது பழைய வாழ்க்கை முறையை மீண்டும் அமைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.=