MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பெங்களூரு ஏர்போர்ட் போனா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…படம், மேட்ச் எல்லாம் ஒரே இடத்தில்

பெங்களூரு ஏர்போர்ட் போனா இந்த இடத்தை மிஸ் பண்ணாதீங்க…படம், மேட்ச் எல்லாம் ஒரே இடத்தில்

பெங்களூரு விமான நிலையத்தில் Gen Z-ஐ கவரும் வகையில் 'Gate Z' என்ற புதிய ஹேங்கவுட் ஸ்பாட் திறக்கப்பட்டுள்ளது. இது வெறும் ஓய்விடம் மட்டுமல்லாமல், கஃபே-பார், ஆம்பிதியேட்டர், வேலை செய்வதற்கான வசதிகளுடன் உள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Jan 23 2026, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பெங்களூரு விமான நிலையம்
Image Credit : X

பெங்களூரு விமான நிலையம்

விமான நிலையம் என்றால் “கேட் அருகே உட்கார்ந்து போன் ஸ்க்ரோல் பண்ணி நேரம் போகணும்” என்ற பழைய ஃபீல் தான் பலருக்கும் வரும். ஆனால் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 2-க்கு சென்றால் அந்த எண்ணமே மாறும். குறிப்பாக Gen Z-ஐ மனதில் வைத்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய ஹேங்கவுட் ஸ்பாட் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு “Gate Z” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது வெறும் ஓய்வெடுக்கும் இடமல்ல, நண்பர்களுடன் பேசவும், ஒரு காப்பி குடித்தபடியே நேரம் கழிக்கவும் சரியான சமூக இடமாக உள்ளது. இந்த பெயரே தேசிய அளவிலான போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டதாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விமான பயணிகளுக்கு முக்கிய அம்சங்கள்
Image Credit : Google

விமான பயணிகளுக்கு முக்கிய அம்சங்கள்

இந்த “Gate Z” பகுதி, விமான நிலையத்தின் பிரபலமான ‘080 International Lounge’ அருகிலேயே அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் கண்களை கவரும் லைட்டிங், வளைவான சீட்டுகள், மாடர்ன் லுக் என்று ஒரு சின்ன “சினிமா செட்” மாதிரி தெரியும். செல்ஃபி, ரீல்ஸ் எடுக்க விரும்புபவர்களுக்கு எங்கும் ஃபோட்டோ-ஃப்ரெண்ட்லி ஸ்பாட்ஸ் ரெடியாக இருக்கிறது. இங்குள்ள முக்கிய அம்சங்கள் பயணிகளுக்கு செம்ம சுவாரஸ்யம் தரும் வகையில் உள்ளன.

34
கெம்பேகவுடா விமான நிலையம் டெர்மினல் 2
Image Credit : Google

கெம்பேகவுடா விமான நிலையம் டெர்மினல் 2

பயணத்தின் நடுவே ரிலாக்ஸ் செய்ய ‘Bubble & Brew’ என்ற கஃபே-பார், நண்பர்களுடன் ஜாலியாக பேச ‘The Sipping Lounge’, ரெட்ரோ ஸ்டைல் ​​உணவு அனுபவத்திற்கு ‘Subway Diner’ ஆகியவை முக்கிய ஹைலைட். அதோடு, விமான நிலையத்துக்குள்ளேயே திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க ஆம்பிதியேட்டர் போல ஒரு பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே இடைக்கிடை “பாப்-அப்” நிகழ்ச்சிகளும் நடக்கும்.

44
ஃப்ரீலான்சர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்கள்
Image Credit : Google

ஃப்ரீலான்சர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்கள்

வேலை செய்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. ஹைஸ்பீட் வைஃபை, நிறைய சார்ஜிங் பாயிண்ட்ஸ், பயணிகளுக்கு வழிகாட்டும் AI நெவிகேஷன் சிஸ்டம் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது எந்த “எக்ஸ்க்ளூசிவ் கிளப்” மாதிரியும் இல்லை. வேலை பார்ப்பவர்கள், ஃப்ரீலான்சர்கள், குடும்ப பயணிகள் என எல்லாரும் சுலபமாக வந்து அமர்ந்து நேரம் கழிக்கலாம். வசதி, கலாச்சாரம், அனுபவம் எல்லாம் சேர்ந்த ஒரு புதிய மைல்கல் இது என்பதில் சந்தேகம் இல்லை.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெங்களூரு
பயணம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இந்த சிறப்பு ரயில்களில் சீட் காலியா இருக்கு!
Recommended image2
DA Hike Good News: அகவிலைப்படி 63% ஆகிறதா? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! மாத சம்பளத்தில் எவ்வளவு கூடும்?
Recommended image3
VDA Hike: குறைந்தபட்ச ஊதியம் ரூ.1,111.! அனைத்து தொழிலாளர்களுக்கும் புதிய சம்பளம்.! அதிரடியாக உயர்ந்த VDA!
Related Stories
Recommended image1
வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன்… எல்லாம் ஒரே EMI-ஆக மாற்றலாம்!
Recommended image2
பஜாஜ் போட்ட சூப்பர் தள்ளுபடி.. இந்த ஸ்கூட்டர் வாங்கலேன்னா பின்னாடி வருத்தப்படுவீங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved