பஜாஜ் போட்ட சூப்பர் தள்ளுபடி.. இந்த ஸ்கூட்டர் வாங்கலேன்னா பின்னாடி வருத்தப்படுவீங்க
பஜாஜ் ஆட்டோ புதிய சேடக் C25 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.91,399 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாலிக் பாடி, 113 கி.மீ ரேஞ்ச், மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களுடன் இது வருகிறது.

பஜாஜ் சேடக் C25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் புதிய பஜாஜ் சேடக் C25 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாடல் ஜனவரி 19, 2026 அன்று அறிவிக்கப்பட்டது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.91,399. ஆனால் “Early Bird Offer” மூலம் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,299 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் விலை ரூ.87,100 ஆக குறைகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் டெலிவரி மற்றும் ஷோரூம் ரோல்அவுட் ஆரம்பமாகியுள்ளது.
பஜாஜ் சேடக் C25 அம்சங்கள்
லுக்கில் பார்த்தால், Chetak C25 தனது நியோ-ரெட்ரோ ஸ்டைலை தக்க வைத்துக் கொண்டுள்ளது. குதிரை கால் (குதிரைக்கால்) வடிவ LED ஹெட்லேம்ப், சிம்பிளானா அப்ரன் வடிவமைப்பு, மென்மையான காண்டூர்கள் என குறைந்தபட்ச தோற்றம் கண் கவர்கிறது. சைடு பேனல்களில் புதிய கிராஃபிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது, பின்புறத்தில் புதிய டெயில் லைட்டும் வழங்கப்பட்டுள்ளது.
பஜாஜ் சேடக் C25 வசதிகள்
இந்த ஸ்கூட்டரின் முக்கிய ஹைலைட் என்னவென்றால், இந்திய மார்க்கெட்டில் மெட்டாலிக் பாடி கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இது தனித்து நிற்கிறது. மேலும் 25 லிட்டர் ஸ்டோரேஜ், 650மிமீ நீளமான சீட் ஆகியவை தினசரி பயணத்திற்கு கூடுதல் வசதியாக இருக்கும். நிறங்களை பார்க்கையில் ரேசிங் ரெட், மிஸ்டி யெல்லோ, ஓஷன் டீல், ஆக்டிவ் பிளாக், ஓபலெசென்ட் சில்வர், கிளாசிக் ஒயிட் என 6 ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
டெக் அம்சங்களில் கலர்டு LCD டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மூலம் கால்/SMS அலர்ட், டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. மேலும் Hill Hold Assist இருப்பதால், இரண்டு பேர் இருந்தாலும் 19% இன்க்ளைன் ஏற்றத்தில் ஸ்கூட்டர் சுலபமாக மேலே செல்ல உதவுகிறது.
பஜாஜ் சேடக் C25 சார்ஜிங் நேரம்
பெர்ஃபார்மன்ஸ் பகுதி பேசினால், இதில் 2.5 kWh பேட்டரி மற்றும் 2.2 kW மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 113 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என கூறப்படுகிறது. பேட்டரி 0-80% வரை 2 மணி 25 நிமிடங்களில் சார்ஜ் ஆகும். கூடவே வரும் 750W ஆஃப்-போர்டு சார்ஜர் மூலம் 0-100% முழு சார்ஜ் 4 மணிநேரத்திற்குள் முடியும் என்று பஜாஜ் தெரிவித்துள்ளது.

