500 கிமீ ரேஞ்ச்.. டாடா புதிய லக்சுரி எலக்ட்ரிக் கார் மாஸ்.. Skoda, Toyota-க்கு போட்டி
டாடா மோட்டார்ஸ் தனது புதிய பிரீமியம் மின்சார கார் பிராண்டான அவின்யாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் சுமார் 500 கிமீ ரேஞ்ச் மற்றும் இரட்டை மோட்டார் அமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவின் அவின்யா கார்
டாடா மோட்டார்ஸ் தனது புதிய பிரீமியம் மின்சார கார் பிராண்டான அவின்யாவை 2027 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2025 இந்தியா மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட Avinya X கான்செப்ட் மாடல் இந்த புதிய பிராண்டின் முதல் தயாரிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்நிலை வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்படும் இந்த பிராண்டிற்காக ஆரம்பத்தில் டயர்-1 நகரங்களில் மட்டுமே சில பிரத்யேக ஷோரூம்கள் அமைக்கப்படும் திட்டமிடப்பட்டுள்ளது.
டாடா அவின்யா எலக்ட்ரிக் கார்
அவின்யா திட்டம் டாடா மோட்டார்ஸின் மிக முக்கியமான மற்றும் பெரிய முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பிராண்டின் கீழ் வரும் எஸ்யூவி மாடல்கள் அனைத்தும் Harrier EV-யை விட உயர்ந்த பிரீமியம் நிலை கொண்டதாக இருக்கும். மேலும், இந்த பிராண்டுக்கு குறைந்த அளவில் டாடா லோகோ பயன்படுத்தப்படுகிறது. விற்பனை மற்றும் சேவை வசதிகளும் தனித்தனி ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங்களின் மூலம் வழங்கப்படும்.
டாடா மோட்டார்ஸ்
தற்போது டாடா நிறுவனம் தனது ICE மற்றும் EV வாகனங்களுக்கு தனித்தனி விற்பனை மையங்கள் வைத்துள்ளது. மேலும், அவின்யாவிற்காக தனிப்பட்ட ஷோரூம்கள் மற்றும் டச் பாய்ண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் அனுபவம் மற்றும் நேரடி ஷோரூம் அனுபவத்தை இணைக்கும் ஒரு கலப்பு முறையில் இந்த விற்பனை வலைப்பின்னல் செயல்படும். ஆரம்ப கட்டத்தில் டயர்-1 மற்றும் டயர்-2 நகரங்களில் இந்த சேவை விரிவாக்கப்படும்.
டாடா அவின்யா விலை
விலை விஷயத்தில் பார்க்கும்போது, அவின்யா மாடல்கள் Harrier EV-யை விட அதிக விலையிலான பிரிமியம் பிரிவில் இருக்கும். இதனால் Skoda, Toyota, BYD மற்றும் Volkswagen போன்ற நிறுவனங்கள் தற்போது பிரிவில் டாடா நுழைய உள்ளது. எதிர்காலத்தில் Hyundai, Kia, Honda போன்ற நிறுவனங்களுடனும் போட்டி உருவாகும். கூடுதலாக Mercedes-Benz, BMW, Audi மற்றும் Jeep போன்ற ஆடம்பர கார் பிராண்டுகளுடனும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
டாடா அவின்யா அம்சங்கள்
அம்சங்களைப் பொறுத்தவரை, அவின்யா மாடலில் டி-வடிவ லைட் சிக்னேச்சர், பட்டாம்பூச்சி கதவுகள், சுழலும் இருக்கைகள் போன்ற தனித்துவ அம்சங்கள் இடம்பெறும். பெரிய அலாய் வீல்கள், அகலமான கதவுகள், LED லைட்கள் மற்றும் ஸ்டைலான இன்டீரியர் வடிவமைப்பு இதில் இருக்கும். பெரிய டஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளும் வழங்கப்படலாம். இரட்டை எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வரும் இந்த கார் ஒரே சார்ஜில் சுமார் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

