டாடாவின் விலை குறைந்த கார் வரப்போகுது.. ஒரே சார்ஜில் அதிக தூரம்.. எப்போ தெரியுமா?
டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதிய அப்டேட்களுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மேம்பட்ட பேட்டரி மற்றும் 6-in-1 எலக்ட்ரிக் டிரைவ் தொழில்நுட்பத்துடன் அதிக ரேஞ்ச் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட்
புதிய அப்டேட்களுடன் வரும் இந்த மாடலில், காரின் வெளிப்புற வடிவமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முன்புறத்தில் மட்டுமல்ல பக்கவாட்டு மற்றும் பின்புற டிசைனிலும் அப்டேட்கள் இருக்கலாம். தற்போது சோதனை செய்யப்படும் டெஸ்ட் மியூல் மாடலில் புதிய வடிவமைப்பில் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய அலாய் வீல்கள் கார் தோற்றத்தை மேம்படுத்துவதுடன், எரிசக்தி திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
டாடாவின் புதிய கார்
பின்புற வடிவமைப்பைப் பார்க்கும்போது, இந்த புதிய மாடலில் கனெக்டெட் டெயில் லைட்ஸ் வழங்கப்படும் வாய்ப்பு அதிகம். சமீப காலங்களில் பல புதிய கார்களில் இந்த டிசைன் பிரபலமாகி வருகிறது. இதனால் கார் இரவு நேரத்தில் மிகவும் ஸ்டைலிஷாகவும், மாடர்னாகவும் தோன்றும். அதே நேரத்தில், டெயில் கேட் மற்றும் பின்புற பம்பர் ஆகியவற்றிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டி லுக்
இந்த மாற்றங்களால் கார் முழுவதும் ஒரு பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டி லுக் பெறும். குறிப்பாக இரவு நேரத்தில் LED லைட்டிங் மற்றும் கனெக்டெட் டெயில் லைட்ஸ் சேர்ந்து காரின் தோற்றத்தை மேலும் கவர்ச்சியாக மாற்றும். இதனால் இளம் வாடிக்கையாளர்கள் மற்றும் நகரப் பயணிகளிடம் இந்த மாடல் அதிக கவனம் பெறும் வாய்ப்பு உள்ளது. அது வேறு எந்த காரும் இல்லை, டாடா நிறுவனத்தின் கார் தான் அது.
புதிய தொழில்நுட்பம்
பவர் மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தில் கூட முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிறுவனம் இந்த புதிய மாடலில் 6-in-1 எலக்ட்ரிக் டிரைவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த தொழில்நுட்பம் காரின் எடையை குறைக்க உதவுவதுடன், பழுதுபார்ப்பு மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் ஓட்டும் அனுபவம் மென்மையாகவும், திறமையாகவும் இருக்கும்.
ஒரே சார்ஜில் அதிக தூரம்
தற்போது இந்த மாடலில் 19.2kWh மற்றும் 24kWh பேட்டரி பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால் புதிய அப்டேட் மாடலில் இதைவிட பெரிய அல்லது மேம்பட்ட பேட்டரி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் திறன் கிடைக்கும். இதன் மூலம் இந்த எலக்ட்ரிக் கார் தினசரி பயணங்களுக்கும், நகரப் பயன்பாட்டிற்கும் மேலும் வசதியான தேர்வாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

