20 தூக்க மாத்திரைகள்.. துடிதுடித்த கணவர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி விடிய விடிய!
கள்ளக்காதலுக்காக, லட்சுமி மாதுரி என்ற பெண் தனது கணவருக்கு பிரியாணியில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். பின்னர், காதலன் கோபியுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி கணவனைக் கொலை செய்தார்.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் சிலுவூரை சேர்ந்தவர் சிவ நாகராஜு (45). இவரது மனைவி லட்சுமி மாதுரி (37). இந்த தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்ளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி மாதுரி சினிமா தியேட்டர் ஒன்றில் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து வந்தார். அப்போது கோபி என்பவருடன் லட்சுமி மாதுரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கணவர் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு வரழைத்து லட்சுமி மாதுரி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவனை கொலை செய்ய மனைவி திட்டமிட்டார். அதன்படி மாதுரி 20 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி பிரியாணியில் கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிவனாகராஜு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.
பின்னர் லட்சுமி மாதுரி காதலன் கோபியை போன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சிவனாகராஜுவின் முகத்தில் தலையணையை வைத்து மூச்சுத் திணறடித்து துடிதுடிக்க கொலை செய்யப்பட்டார். கணவனை கொன்ற பிறகு அந்த பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் சடலத்தின் அருகே அமர்ந்து ஆபாச படங்களைப் பார்த்தது மட்டுமல்லாமல் உல்லாசமாக இருந்துள்ளனர்.
கணவர் மாரடைப்பால் இறந்ததாக கிராம மக்களை நம்ப வைத்துள்ளார். சிவனாகராஜுவின் தந்தையும் நண்பர்களும் உடலை பார்த்தபோது, காயங்களுடன் இரத்தக் கறைகளும் இருந்ததால் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து நாகராஜுவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நாகராஜு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மார்பில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லட்சுமி மாதுரியை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அவருடைய செல்போனை பரிசோதித்த போது கடைசியாக கோபி என்பவருடன் பேசியது தெரியவந்தது. இறுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை மனைவி லட்சுமி மாதுரி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

