Asianet News TamilAsianet News Tamil

P.Chidambaram: வேலையில்லை! 8 ஆண்டுகள் மோடி ஆட்சியின் பரிசு: ப.சிதம்பரம் விளாசல்

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசின் சாதனை, பரிசு என்ன என்று கேட்டால் இளைஞர்களுக்கு வேலையில்லை என்பதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

No jobs! Chidambarams most recent criticism of the modi  government
Author
First Published Oct 29, 2022, 5:09 PM IST

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசின் சாதனை, பரிசு என்ன என்று கேட்டால் இளைஞர்களுக்கு வேலையில்லை என்பதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அடிக்கடி தனது ட்வீட்டிலும், விமர்சனத்திலும் நாட்டில் இளைஞர்கள் வேலைகிடைக்காமல் படும் அவலங்களை தொடர்ந்து கூறி விமர்சித்து வருகிறார். 

ஒதுங்கியிருங்கள்! இலவசங்களை முறைப்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை: காங்கிரஸ் கட்சி பதில்

ராகுல் காந்தி தற்போது செல்லும் பாரத் ஜோடோ நடைபயணத்திலும் பேசும்  போது நாட்டில் நிலவும் வேலையின்மை பிரச்சினையை தொடர்ந்து எழுப்பி வருகிறார். காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மி கட்சியும் வேலையின்மை சிக்கல் குறித்து மத்தியஅரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இமாச்சலப்பிரதேசம், குஜராத், மற்றும் கர்நாடக தேர்தலில் வேலையின்மை விவகாரம் கடுமையாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. இதற்காகவே மத்திய அரசு கடந்த வாரம் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி முதல் கட்டமாக 75ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வழங்கியது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறையாக மாடுகள் மீது மோதி விபத்து

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில்  சி கிரேட் பணிக்காக லட்சக்கணக்கில் இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

அவர் பதிவிட்ட ட்விட்டர் கருத்தில் “ உத்தரப்பிரதேசத்தில் சி கிரேட் பணிக்காக 37 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தற்போது 40ஆயிரம் அக்னீவர் பணிக்காக 35 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இளைஞர்களின் வேதனையான குரலை மத்திய அரசு கேட்கிறதா. நாங்கள் விரக்தியில் இருக்கிறோம், எங்களுக்கு வேறு வாய்ப்பில்லை. 

சமாஜ்வாதி ஆசம் கான் எல்எல்ஏ பதவி பறிப்பு: உ.பி. சட்டப்பேரவையிலிருந்து நீக்கம்: காலியிடமாக அறிவிப்பு

8 ஆண்டுகள் மோடி ஆட்சியின் சாதனை, பரிசு! வேலையின்மைதான்!. 

நாட்டில் வேலையின்மை 8 சதவீதமாக இருக்கிறது. ஆனால், இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நிதிஅமைச்சகம் செப்டம்பர் மாத அறிக்கையில், வேலையின்மை குறித்து ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை 

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios