Asianet News TamilAsianet News Tamil

ECI: ஒதுங்கியிருங்கள்! இலவசங்களை முறைப்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை: காங்கிரஸ் கட்சி பதில்

இலவசங்களை ஒழுங்குமுறைப்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை. தேர்தல் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தி, தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது.

The EC lacks the authority to control concerns such as freebies: Cong
Author
First Published Oct 29, 2022, 2:01 PM IST

இலவசங்களை ஒழுங்குமுறைப்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை. தேர்தல் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தி, தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் உ.பி.யில் பண்டேல்கந்த் எக்ஸ்பிரஸ் சாலை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி “ இலவச கலாச்சாரம் நாட்டின் வளர்சிக்கு ஆபத்து. இதிலிருந்து அரசியல் கட்சிகள் வெளிவர வேண்டும்”எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பாஜக, ஆம்ஆத்மி இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

The EC lacks the authority to control concerns such as freebies: Cong

நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கும் இலவசங்கள், தேர்தலுக்கு பின் வழங்கும் இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும், வரையறை செய்ய  வேண்டும். விதிமுறைகளை மீறி நடக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை பறித்து, அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயே பொதுநலன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. 

இது திணிப்பு அல்ல; வெறும் பரிந்துரை மட்டுமே... பிரதமர் மோடி கூறுவது என்ன?

தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கும் முன் அரசியல் கட்சிகள் தங்களின் நிதிச்சூழலை அறிவிக்க வேண்டும் அதற்காக மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தில் திருத்தம் செய்யும் முன் அனைத்துக் கட்சிகளின் கருத்தையும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது, 19ம்தேதிக்குள் பதிலைத் தெரிவிக்க கேட்டுக்கொண்டிருந்தது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

The EC lacks the authority to control concerns such as freebies: Cong

பிரம்மாண்ட 369 அடி உயரம்! உலகிலேயே உயரமான சிவன் சிலை இன்று ராஜஸ்தானில் திறப்பு

இலவசங்கள் அறிவிப்பு என்பது துடிப்பான ஜனநாயகத்தின் அம்சங்களில் ஒன்று. இது வாக்காளர்களின் அறிவுக்கூர்மை, பகுத்தறிவு ஆகியவற்றைச் சேர்ந்தது. வாக்காளர்களின் புத்திக்கூர்மை திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது. 

தேர்தல் வாக்குறுதிகளை ஏற்பதா அல்லது இல்லையா என்று ஆய்வு செய்து முடிவு எடுப்பது வாக்காளர்கள். இந்த முடிவை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். இலவசங்களை ஒழுங்குமுறை செய்யும் விஷயத்தில் அதிகார வரம்பு தேர்தல் ஆணையமோ, அரசாங்கமோ அல்லது நீதிமன்றம் கூட வர முடியாது.

சமாஜ்வாதி ஆசம் கான் எல்எல்ஏ பதவி பறிப்பு: உ.பி. சட்டப்பேரவையிலிருந்து நீக்கம்: காலியிடமாக அறிவிப்பு

ஆதலால் தேர்தல் ஆணையம் இதில் ஒதுங்கி இருப்பது நல்லது.கடந்த காலங்களில் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தாமல் கட்டுப்பாட்டுடன் நடந்துள்ளது தேர்தல் பிரச்சாரத்தின் போது வரும் புகார்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. தேர்தல் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தி, தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த கவனம் செலுத்த வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios