Asianet News TamilAsianet News Tamil

Statue of Lord Shiva: பிரம்மாண்ட 369 அடி உயரம்! உலகிலேயே உயரமான சிவன் சிலை இன்று ராஜஸ்தானில் திறப்பு

உலகிலேயே மிகவும் உயரமான சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலம், நாத்வாராவில் இன்று திறக்கப்பட உள்ளது. இதன் உயரம் 369 அடியாகும்.

The tallest Shiva statue in the world is a new one in Rajasthan.
Author
First Published Oct 29, 2022, 10:31 AM IST

உலகிலேயே மிகவும் உயரமான சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலம், நாத்வாராவில் இன்று திறக்கப்பட உள்ளது. இதன் உயரம் 369 அடியாகும்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இருந்து 45 கி.மீ தொலைவில் ராஜ்சமந்த் மாவட்டம் அமைந்துள்ளது. அங்கு உள்ள நாத்வாரா நகரில் உள்ள ஒரு குன்றின் மீது 369 அடி உயரத்தில் “விஸ்வஸ் ஸ்வரூபம்” என்ற பெயரில் உலகிலேயே உயரமான சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகள் & நாணயங்கள் எப்படி உருவாகிறது தெரியுமா ? இவ்வளவு ரூல்ஸ் இருக்கா ?

உலகிலேயே இந்த சிவன்சிலைதான் உயரமானதாகக் கருதப்படுகிறது. முதல் அசோக் கெலாட், சபாநாயகர் சிபி ஜோஷி உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று சிலை திறக்கப்படுகிறது.

The tallest Shiva statue in the world is a new one in Rajasthan.

கடந்த 2012ம் ஆண்டு இந்த சிலையை கட்ட திட்டமிடப்பட்டது. 3 ஆயிரம் டன் உருக்கு, இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏறக்குறைய 10 ஆண்டுகளில் இந்த சிவன் சிலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை 250 ஆண்டுகள் நிலைத்திருக்கும் வகையில், 250 கி.மீ வேகத்தில் காற்று வீசினால்கூட தாக்குப்பிடிக்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. தியான நிலையில் சிவன் அமர்ந்திருக்கும் வகையில் உள்ள சிலையை 20 மீட்டர் தொலைவில் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 370 ரத்து காரணமாக காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் குறைந்துள்ளது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

சன்ஸ்தான் அறக்கட்டளை மற்றும் மிராஜ் குழுமத்தின் தலைவர் மதன் பாலிவால் கூறுகையில் “ 29ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை இந்த சிலையைச் சுற்றி மதரீதியான நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநாத்ஜி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிலை மதரீதியான சுற்றுலாவுக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக அமையும்” எனத் தெரிவித்தார்.

The tallest Shiva statue in the world is a new one in Rajasthan.

இரவு நேரத்தில் இந்த சிலையை அனைவரும் பார்க்கும் வகையில் சிறப்பு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிலைக்குள் 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் பக்தர்கள் சிலையை காண முடியும். இங்கு ஒரு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்... விரைவில் டிஜிட்டல் கரன்சி, பிளாக்செயின் முறை!!

இந்த சிலையைச் சுற்றி பக்தர்கள், மக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, சாகச சுற்றுலாவசதிகள் , உணவுப்பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios