Asianet News TamilAsianet News Tamil

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்... விரைவில் டிஜிட்டல் கரன்சி, பிளாக்செயின் முறை!!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் அடுத்த கட்டமாக டிஜிட்டல் கரன்சி, பிளாக்செயின் முறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

India is number one in digital money transactions
Author
First Published Oct 28, 2022, 11:29 PM IST

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் அடுத்த கட்டமாக டிஜிட்டல் கரன்சி, பிளாக்செயின் முறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைமுறைகளை கண்காணிக்கும் ஏசிஐ வேர்ல்டுவைடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 2,550 கோடி பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் நடைபெற்றுள்ளன. இந்த தரவுகளின்படி பார்த்தால், உலக அளவில் இந்தியா முதலிடத்திலும், சீனா 1,570 கோடியும், தென் கொரியா 600 கோடியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2020-21ம் நிதியாண்டில் 5,554 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந்த நிலையில், 2021-22ம் ஆண்டில் டிஜிட்டல் முறையில் 7,422 கோடி பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இது திணிப்பு அல்ல; வெறும் பரிந்துரை மட்டுமே... பிரதமர் மோடி கூறுவது என்ன?

மேலும் கூகுள் மற்றும் தி பாஸ்டன் கன்சல்டன்சி குழுமத்தின் அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் விகிதம் 15 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் நோட்டுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை கருத்தில் கொண்டால், அதன் மதிப்பு நோட்டுகளின் மதிப்புக்கு சமமாக உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி ‘இ-ரூபி (டிஜிட்டல் கரன்சி) என்ற தனி நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: சட்டப்பிரிவு 370 ரத்து காரணமாக காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் குறைந்துள்ளது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

இ-ரூபி என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் நேரடித் தொடர்பில்லா நடைமுறையாகும். டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை இல்லாமல், டிஜிட்டல் முறையில் செலுத்தும் செயலி வசதி இல்லாமல் அல்லது நெட் பேக்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு முறையில் பணம் செலுத்த முடியும். இதை நிதி சேவைகள் துறை, ஒன்றிய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகமான என்.பி.சி.ஐ உருவாக்கியுள்ளது. சேவை வழங்குபவர்கள் மற்றும் சேவை பெறுபவர்கள் இடையே எளிமையான முறையில் இ-ரூபி முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும் என்றும், மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள் எந்தவொரு சிக்கலும் இன்றி நேரடியாக மக்களுக்கே சென்று சேர இ-ரூபி உதவும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios