rahul: NDA: புள்ளிவிவரங்கள் இல்லாத (NDA) தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு: ராகுல் காந்தி சாடல்
புள்ளிவிவரங்கள் இல்லாததுதான் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு(NDA). என்டிஏ என்பது “நோ டேட்டா அவைளபிள்”. எந்தப் பதிலும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி சாடியுள்ளார்
புள்ளிவிவரங்கள் இல்லாததுதான் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு(NDA). என்டிஏ என்பது “நோ டேட்டா அவைளபிள்”. எந்தப் பதிலும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி சாடியுள்ளார்
ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ புள்ளிவிவரங்கள் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, (நோ டேட்டா அவைளபிள்) நீங்கள் நம்ப வேண்டும் என விரும்புகிறது.
நிரவ் மோடியின் ரூ.253 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளில் யாரும் உயிரிழக்கவில்லை.
கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, கும்பல் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை, எந்த பத்திரிகையாளரும் கைது செய்யப்படவில்லை
கட்சியும் சின்னமும் பறிபோகிறதா? என்ன நடக்கிறது உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சியில்?
புள்ளிவிவரங்கள் இல்லை, பதிலும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை.
இவ்வாறு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, இந்தியில் சப் கயாப் சி(எல்லாம் காணவில்லை) என்ற வார்த்தைக்கான படத்தை பதிவிட்டுள்ளார். அந்தப்படம் அனிமேஷனில் சப் சாங்கா சி(எல்லாம் நன்றாக இருக்கிறது) என்று மாறுகிறது