செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், அடுத்த ஆண்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறைவாகவே இருக்கும், சில நிறுவனங்களில் சம்பளக்குறைப்பு கூட நடக்கலாம் என்றும் என மனிதவள ஆலோசகர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
அடுத்த ஆண்டு நிறுவனங்களில் 10.7 சதவீதம் வரை சம்பள உயர்வு இருக்கலாம் என்று முன்பு இவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்கு பின், அந்த நிலைப்பாட்டை இப்போது இவர்கள் மாற்றிக் கொண்டுள்ளனர்.
உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால் பல துறைகளில் வேலைக்கு ஆள் எடுப்பது குறைந்துள்ளது. மேலும் இதனால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகை குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.
நவம்பர் மாதத்தில் ஊடகத்துறைக்கு வரும் விளம்பரங்கள் குறைந்துள்ளன. ஆகவே, அத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் குறைந்த ஊதிய உயர்வு, அல்லது ஊதியக் குறைப்புக்கு தயாராகுமாறு மனிதவள ஆலோசகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதேசமயத்தில், உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால், நிதி மற்றும் வங்கித்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
