Nithyananda: ஐநாவில் நித்தியானந்தாவுக்கு நீதி கேட்ட கைலாசா நாடு.. இது என்னப்பா புது ட்விஸ்ட்டா இருக்கு.!!
ஐநாவில் பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண் பிரதிநிதிகளுடன் கைலாசா பிரதிநிதிகள் உரையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த சாமியார் நித்தியானந்தா பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார்.
தனது பிடதி ஆசிரமத்தில் பெண் சீடர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்ததாக நித்தியானந்தா மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்கில் கடந்த 2010ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நித்தியானந்தா கர்நாடகா மாநிலம், ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த நித்யானந்தா தலைமறைவானார். இந்த வழக்கின் விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக முன்வரவில்லை. நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து ராம்நநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!
எனவே நித்தியானந்தா இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார்.ஆண், பெண் சீடர்களுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் சாமியார் நித்தியானந்தா கைலாசா என்கிற தனித்தீவை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக திடீரென இணைய தளத்தில் தோன்றி பகிரங்கமாக அறிவித்தார். இதன் பிறகும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கர்நாடகா போலீஸ் நீதிமன்றத்தில் அறிவித்தது.
நித்தியானந்தாவுக்கு மிகவும் சாதகமாக அமைந்ததால் பக்தர்களுக்கு அடிக்கடி யூடியூப் உள்ளிட்ட இணைய தளத்தில் தோன்றி ஆன்மிக உரையாற்றி வருகிறார். அவர் தன் நாட்டுக்கென தனி நாணயங்களையும் வெளியிட்டிருந்தார். ஜெனிவாவில் நடந்த ஐநா சபை கருத்தரங்கில் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
கைலாசா என்ற நாடே இல்லை என இந்தியா மறுத்து வரும் நிலையில், ஐநா கருத்தரங்கில் United States of kailasa என்ற பலகையுடன் பெண் ஒருவர் அமர்ந்திருந்தது பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். கைலாசாவுக்கு தான் தலைவர் என்று நித்தியானந்தாவே அறிவித்துக் கொண்டார். அதேநேரம் இந்த கைலாசாவை ஒரு நாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து உள்ளதா இல்லையா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான குழுவின் கூட்டமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் மா விஜயபிரியா நித்தியானந்தா, கைலாசா லாஸ்ஏஞ்சல்ஸ் தலைவர் மா முக்திகா ஆனந்தா, கைலாசா செயிண்ட் லூயிஸ் தலைவர் மா சோனா காமத், மா நித்யா ஆத்மநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண் பிரதிநிதிகளுடன் உரையாடிய கைலாசா பிரதிநிதிகள் அவர்களுக்கு நித்யானந்தாவின் புத்தகங்களை பரிசாக வழங்கி உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவால் நித்யானந்தா துன்புறுத்தப்பட்டதாக ஐநா கருத்தரங்கில் கைலாசா சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை மட்டுமல்ல, சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..Exit Poll : வடகிழக்கு இந்தியாவை கைப்பற்றும் பாஜக - கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன.? ஒரு பார்வை