Asianet News TamilAsianet News Tamil

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த நிர்மலா சீதாராமன்!

ஃபோர்ப்ஸ் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கடந்த ஆண்டு, 36வது இடத்தைப் பிடித்த நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு 32வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

Nirmala Sitharaman, Roshni Nadar among 4 Indians in Forbes Most Powerful Women list 2023 sgb
Author
First Published Dec 6, 2023, 3:27 PM IST

ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் நான்கு இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் முதன்மையானவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

போர்ப்ஸின் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் போன்ற பிரபல ஆளுமைகள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 32வது இடத்தில் இருக்கிறார்.  HCL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 60வது இடத்ததிலும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தலைவர் சோமா மோண்டல் 70வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா 76வது இடத்திலும் உள்ளனர்.

நிறைய குழந்தை பெத்துக்கோங்க... கண்ணீர் விட்டு கதறும் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்

Nirmala Sitharaman, Roshni Nadar among 4 Indians in Forbes Most Powerful Women list 2023 sgb

நிர்மலா சீதாராமன் 2019ஆம் ஆண்டு இந்தியாவின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதற்கு முன் இந்தியாவின் 28வது பாதுகாப்பு அமைச்சராகவும் நிர்மலா சீதாராமன் பணியாற்றினார். பாதுகாப்புத்துறை மற்றும் நிதித்துறை இரண்டிலும் அமைச்சர் பதவி வகித்த நாட்டின் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

கடந்த ஆண்டு, ஃபோர்ப்ஸ் 2022ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 36வது இடத்தைப் பிடித்தார். இதற்கிடையில், ஃபார்ச்சூன் அவரை இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண் என்றும் அறிவித்தது. பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியப் பெண் தொழிலதிபர் ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்னி நாடார். இவர் ஜூலை 2020 இல் HCL இன் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஃபோர்ப்ஸ் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், முதலிடத்தில் உள்ளவர், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்திலும்,  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க த்துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

பாஜகவுக்கு 2 நாள் முன்பே தேர்தல் முடிவுகள் தெரிந்துவிட்டது: திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios