பாஜகவுக்கு 2 நாள் முன்பே தேர்தல் முடிவுகள் தெரிந்துவிட்டது: திக்விஜய் சிங் குற்றச்சாட்டு
சிப் உள்ள எந்த இயந்திரமும் ஹேக் செய்யப்படலாம். நான் 2003 முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் வாக்களிப்பதை எதிர்க்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சொல்கிறார்.
பாஜக வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்து மூன்று மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வருமான திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் ஃபேஸ்புக்கில் இருந்தும் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் இரண்டு ஸ்கிரீன் ஷாட்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இந்தியில் எழுதியிருக்கிறார்.
அதில், "இந்த இரண்டு படங்களையும் நன்றாகப் பாருங்கள். கச்ரோட் சட்டமன்றத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தன, எவ்வளவு வாக்குகள் வித்தியாசம் என்பதை பாஜக நிர்வாகி எழுதியிருக்கிறார். முக்கியமாக, இந்தப் பதிவு வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, டிசம்பர் 1ஆம் தேதி பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இப்போது இதை முடிவுகளுடன் பொருத்திப் பாருங்கள்" என்று கூறியுள்ளார்.
கோ மூத்திர மாநிலங்களில் தான் பாஜக ஜெயிச்சுருக்கு! திமுக எம்.பி. செந்தில் குமார் சர்ச்சை பேச்சு
மத்தியப் பிரதேசத்தில் உள்ள நாகாடா-கச்ரோட் தொகுதியில் பாஜகவின் டாக்டர் தேஜ்பகதூர் சிங் சவுகான் 15,927 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் திலீப் சிங் குர்ஜாரை தோற்கடித்தார்.
திக்விஜய் சிங் குறிப்பிடும் ஃபேஸ்புக் பதிவு, அனில் சஜ்ஜேத் என்ற டிஜிட்டல் கிரியேட்டரின் பக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. அவரது பக்கம் 2015இல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 5,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்டுள்ளது. சஜ்ஜேத் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளருடன் இருக்கும் படங்களும், பாஜக பேரணிகளில் இருக்கும் படங்களும் காணப்படுகின்றன. பல பதிவுகள் பாஜகவை ஆதரிக்கும் பதிவுகளாக உள்ளன.
உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியில் 1,78,364 வாக்குகள் பதிவாகியுள்ளதாக டிசம்பர் 1ஆம் தேதியன்று சஜ்ஜேட் பதிவிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளில் பாஜக வேட்பாளர் 93,000 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 77,000 வாக்குகளும் பெற்றனர். வாக்கு எண்ணிக்க்ஐ நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்ட சஜ்ஜேட்டில் பதிவில் பாஜக 93,552 வாக்குகளும் காங்கிரஸ் 77,625 வாக்குகளும் பெறும் என்று கணித்திருக்கிறார். இரண்டு எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கின்றன என்பதை திக்விஜய் சிங் சுட்டிக்காட்டுகிறார்.
சென்னையில் 80% இடங்களில் மின் விநியோகம் மீண்டும் தொடக்கம்: தலைமை செயலாளர் தகவல்
திரு சிங்கின் குற்றச்சாட்டு குறித்து பாஜக தலைவரும் எம்எல்ஏவுமான ராமேஷ்வர் சர்மாவிடம் கேட்டதற்கு, "அவர் (திக்விஜய் சிங்) யாரையும் நம்பவில்லை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் நம்பவில்லை, அவர் தன்னையே நம்பவில்லை" என்று கூறியுள்ளார். ஆனால், அனில் சாஜ்ஜேட் கட்சி நிர்வாகியா என்பதை பாஜக சார்பில் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்ற சில நாட்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றி திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில் பாஜக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் சந்தேகித்தது பற்றிய செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், "சிப் உள்ள எந்த இயந்திரமும் ஹேக் செய்யப்படலாம். நான் 2003 முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் வாக்களிப்பதை எதிர்க்கிறேன். நமது இந்திய ஜனநாயகத்தை தொழில்முறை ஹேக்கர்கள் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியுமா! இது அனைத்து அரசியல் கட்சிகளும் விடை காணவேண்டிய அடிப்படை கேள்வி. தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் தயவு செய்து நமது இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்குமா?" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தெலுங்கானா முதல்வர் ஆகிறார் ரேவந்த் ரெட்டி! டிசம்பர் 7ஆம் தேதி பதவியேற்பு விழா!