நிர்பயா பாலியல் குற்றவாளிகளை நாளை தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். கடைசி நிமிடம் வரை குற்றவாளிகள் கருணை மனுவை காட்டி தூக்கிலிருந்து தப்பிக்க போராடி வருகின்றனர். 

இந்நிலையில், வினய் ஷர்மாவின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் மற்ற 3 பேரை நாளை தூக்கிலிடலாம் திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது. நிர்பயா குற்றவாளிகள் தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் இந்த வாதத்தை முன்வைத்துள்ளது. இதனையடுத்து, நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் ஊழியர் பவன்ஜலந்த் மீரட்டில் இருந்து திகார் சிறைக்கு வந்தார். சிறை வளாகத்தில் தங்கும் அவர், தூக்கில் போட பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் மற்ற பொருட்களை ஆய்வு செய்வார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘நிர்பயா’ பாலியல் கொலை வழக்கு குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரையும் நாளை தூக்கில் போட டெல்லி கோர்ட்டு மரண வாரண்டு பிறப்பித்தது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி திகார் சிறையில் நடந்து வரும் நிலையில்  வினய் ஷர்மா நாளை தூக்கிலிருந்து தப்பியுள்ளார். 
 
மற்ற மூவரை தூக்கில்ட உத்தரபிரதேச மாநிலம் மீரட் சிறையில் பணிபுரியும் ஊழியர் பவன்ஜலந்த் என்பவர் 3 பேரையும் தூக்கில் போட உள்ளார். மீரட்டில் இருந்து நேற்று அவர் திகார் சிறைக்கு வந்தார். சிறை வளாகத்தில் தங்கும் அவர், தூக்கில் போட பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் மற்ற பொருட்களை ஆய்வு செய்வார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பவன்ஜலந்த் மூன்றாம் தலைமுறையாக தூக்கிலிடும் ஊழியராக வேலை செய்து வருகிறார்.