நிா்பயா குற்றவாளிகள் விவகாரத்தில் ெடல்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று  விசாரணை நடைபெறுகிறது. மருத்துவ மாணவி நிா்பயா கடந்த 2012, கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், அக்ஷய் தாக்குா், பவன் குப்தா, வினய் குமாா் சா்மா ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் 4 பேருக்கும் கடந்த மாதம் 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி டெத்வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறுத்திவைத்து டெல்லி விசாரணை நீதிமன்றம் கடந்த ஜனவரி 31-ம் தேதி உத்தரவிட்டது.இதை எதிா்த்து மத்திய அரசு, டெல்லி அரசு சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தில்லி உயா்நீதின்றம் தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, மத்திய அரசும், டெல்லி அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே குற்றவாளிகளுக்கு எதிராக புதிததாக தூக்குத் தண்டனை நிறைவேற்றும் உத்தரவை பிறப்பிக்கக் கோரி திகாா் சிறை நிா்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளின் பதிலை இன்று மாலைக்குள் தெரிவிக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திகாா் சிறை நிா்வாகம் சாா்பில் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த  கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தா்மேந்திரா ராணா, வெள்ளிக்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்யுமாறு குற்றவாளிகளுக்கு உத்தரவிட்டாா்.