ஜி20 மாநாடு.. விருந்தில் பங்கேற்கும் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்கள்? - எல்லாம் சுத்த பொய்.. வெளியான தகவல்!
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தனது நிலையை வெளிப்படுத்தும் நிலையில், இந்திய கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி உட்பட இந்தியாவின் பணக்கார அதிபர்கள், இந்திய தலைநகர் டெல்லியில் நாளை சனிக்கிழமை இரவு நடக்கும் G20 தலைவர்களுடன் சிறப்பு விருந்தில் கலந்துகொள்ளவுள்ளனர் உள்ளனர் என்ற தகவல் ஒன்று வெளியானது.
இதுகுறித்து சில ஊடங்களில் வெளியான தகவலின்படி, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பார்தி ஏர்டெல் நிறுவனர்-தலைவர் சுனில் மிட்டல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி உள்ளிட்ட 500 வணிகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வெளியானது.
நாளை சனிக்கிழமை இரவு நடக்கும் அந்த விருந்தானது, இந்தியாவில் வணிகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கும் என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஜி20 உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை உற்சாகமாக வரவேற்கும் இந்தியா!
ஆனால் தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி வணிகத் தலைவர்கள் யாரும் விருந்துக்கு அழைக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கபட்டுள்ளது. PIB Fact Check என்ற நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து ஜி20 தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து பிரதமர், இத்தாலி பிரதமர், அர்ஜெண்டினா அதிபர், ஆப்பிரிக்க யூனியன் தலைவர், ஐரோப்பிய ஆணைய தலைவர், ஐஎம்எஃப் தலைவர், உலக வர்த்த மைய இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட பலர் இதுவரை இந்தியா வந்துள்ளனர். டெல்லி விமான நிலையம் வந்த அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இறைச்சி சாப்பிடுவதால்தான் இயற்கை பேரிடர் வருகிறது: ஐஐடி இயக்குநர் சர்ச்சை பேச்சு!