ஜி20 உச்சி மாநாட்டுக்கு டெல்லி வரும் தலைவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது

இந்திய மண்ணில் உலகளாவிய தலைவர்களின் முக்கியமான கூட்டம் நடைபெறவுள்ளது. ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியா தலைமையின் கீழ் ஜி20 உச்சி மாநாடு வருகிற 9,10ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதனால், டெல்லி விழாக் கோலம் பூண்டுள்ளது.

டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து ஜி20 தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

Scroll to load tweet…

இங்கிலாந்து பிரதமர், இத்தாலி பிரதமர், அர்ஜெண்டினா அதிபர், ஆப்பிரிக்க யூனியன் தலைவர், ஐரோப்பிய ஆணைய தலைவர், ஐஎம்எஃப் தலைவர், உலக வர்த்த மைய இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட பலர் இதுவரை இந்தியா வந்துள்ளனர். டெல்லி விமான நிலையம் வந்த அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஜி20: உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் - பிரதமர் மோடி!