Asianet News TamilAsianet News Tamil

Rahul Gandhi cutout: தேசியக் கொடி மிஞ்சிய ராகுல் கட்அவுட்! காங்கிரசை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

ராகுல் காந்தி கொடியேற்றும் நிகழ்ச்சியில் தேசியக் கொடியைவிட உயரமாக ராகுல் காந்தியின் கட்அவுட் இடம்பெற்றிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Netizens react angrily on national flag being smaller than Rahul Gandhi cutout
Author
First Published Jan 29, 2023, 3:05 PM IST

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமைப் பயணம் ஜம்முவில் இன்று நிறைவை எட்டியது. இதனை முன்னிட்டு லால்சௌக் பகுதியில் தேசியக் கொடியை ஏற்றி தனது நடைபயணத்தை ராகுல் நிறைவு செய்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றிய இடத்தின் பின்னணியில் கொடிக்கம்பத்தை விட உயரமாக ராகுல் காந்தியின் கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. ராகுல் கொடியேற்றும் நிகழ்வு போட்டோ மற்றும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டவுடன் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர்.

ஒருவர் ராகுல் கொடி ஏற்றும் வீடியோவைப் பகிர்ந்து, “தேசியக் கொடியா? பப்புவா? எது பெரியது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Arif Mohammed Khan: இந்தியாவில் பிறந்த எல்லோரும் இந்துதான்! கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பேச்சு

மற்றொருவரும் வீடியோவைப் பகிர்ந்து, “தேசியக் கொடியைவிட ராகுல் காந்தியின் கட்அவுட்தான் பெரிதாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் இந்தியாவையும் இந்தியர்களையும் அவமதித்து வருகிறது” என்று சொல்லியிருக்கிறார்.

“தேசியக் கொடியைவிடப் பெரிய கட்அவுட். இந்தக் காட்சியே அனைத்தையும் சொல்லிவிடுகிறது” என்று மற்றொரு நெட்டிசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆபாச படங்களை வைத்து பெண்களை மிரட்டிய சிறுவன்.. இன்ஸ்டாகிராம் காதல் - அதிர்ச்சி சம்பவம் !

ராகுலின் உருவம் தேசியக் கொடிக்கு மேல் இருப்பது எவ்வளவு பெரிய அவமதிப்பு என்று இன்னொருவர் ட்வீட் செய்துள்ளார். “காங்கிரஸ் கட்சி தேசியக் கொடியைவிட ராகுல் காந்தியைத்தான் பெரிதாக மதிக்கிறது என்பதை இதுவே நிரூபித்து வருகிறது” என்று சொல்கிறார் வேறொரு நெட்டிசன்.

Follow Us:
Download App:
  • android
  • ios