ஆபாச படங்களை வைத்து பெண்களை மிரட்டிய சிறுவன்.. இன்ஸ்டாகிராம் காதல் - அதிர்ச்சி சம்பவம் !
டெல்லியில் 17 வயது சிறுவன் ஒருவன், பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று அவர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்ஸ்டாகிராமில் பல மைனர் பெண்களை பின்தொடர்ந்து அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாக 17 வயது சிறுவனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
தனது 14 வயது மகள் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் யாரோ ஒருவருடன் பகிர்ந்து கொண்டதாகவும், அவை பரப்பப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுவதாகவும் தந்தையிடமிருந்து புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுமிகளை மிரட்டியதாக 17 வயது சிறுவனை டெல்லி போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதையும் படிங்க..கள ஆய்வில் முதலமைச்சர்.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் - முதல்வர் ஸ்டாலின் அடித்த அடுத்த சிக்சர் !!
இன்ஸ்டாகிராமில் அவர்களுடன் நட்பாக பழகிய பிறகு அவர்களது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என்று சிறுவன் மிரட்டினான். ஒரு 14 வயது சிறுமி, சிறுவனுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகலாம் என்று பயந்த சிறுமி, அவரது தந்தையிடம் கூறி போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளத்தை அறிய ஐபி முகவரிகள் மற்றும் மொபைல் எண்ணைக் கண்காணித்தனர். குற்றவாளியை அடையாளம் கண்டுகொண்ட பிறகு, போலீசார் அவரது வீட்டிற்கு வந்தனர். ஆனால் சிறுவன் அங்கு இல்லை. எனவே, மகனை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தும்படி அவரது தந்தைக்கு உத்தரவிடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை அவரை காவல்துறையில் ஆஜர்படுத்தினார், அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கூறிய போலீசார், சிறுவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தற்போது இளங்கலை மாணவராக உள்ளார்.
குற்றத்திற்கு பயன்படுத்திய சிம்கார்டு மற்றும் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் இந்த சிறுமி மட்டுமல்லாமல், பல்வேறு பெண்களும் இத்தானில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?