இந்தியாவில் பிறந்தவர் யாராக இருந்தாலும் அவரை இந்து என்று அழைக்கலாம் என்றும் தானும் ஓர் இந்துதான் என்றும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்து சமய மாநாடு ஒன்றில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார். இந்தக் கூட்டம் வட அமெரிக்காவைச் சேர்ந்த கேரள இந்துகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பேசிய ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை நிறுவிய சையது அகமது கானை நினைவுகூர்ந்து பேசினார். “இந்து என்பது மதத்தைக் குறிக்கும் பெயர் அல்ல, புவியியல் ரீதியாகவே அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது என்று செய்யது அகமது கான் கூறினார்” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவில் பிறந்தவர் எவராக இருந்தாலும், இந்திய நதிகளில் பாயும் நீரை அருந்தி, இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை உண்டு, இந்தியாவிலேயே வளர்ந்த, அனைவரும் இந்து என்று அழைக்கப்படலாம்” என்றும் ஆரிப் முகமது கான் கூறினார்.
ஆபாச படங்களை வைத்து பெண்களை மிரட்டிய சிறுவன்.. இன்ஸ்டாகிராம் காதல் - அதிர்ச்சி சம்பவம் !
“நானும் இந்துதான். என்னையும் இந்து என்றே அழைக்கவேண்டும்” என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், “பிரிட்டஷ் ஆட்சி காலத்தில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று அழைப்பது மிகவும் சரியானதாகவே இருந்தது. ஏனென்றால் பிரிட்டிஷ் அரசு அதன் அடிப்படையில்தான் மக்களின் அடிப்படை உரிமைகளையே நிர்ணயம் செய்தது.”
சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராக இருந்த சையது அகமது கானின் பதவிக்காலம் முடிந்தபோது ஆரிய சமாஜம் சார்பில் அவருக்கு விழா எடுக்கப்பட்டதாவும் அக்கூட்டத்தில் பேசிய சையது அகமது கான் தன்னையும் இந்து என்று அழைக்கலாம் என்று கூறியதாவும் ஆளுநர் ஆரிப் தெரிவித்தார்.
Mughal Garden: ராஷ்டிரபதி பவனின் முகல் கார்டன் இனி அம்ரித் உதயான்.. பெயர் மாற்றத்துக்கு என்ன காரணம்?
