NEET SS 2022 : உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எப்போது..? வெளியான தேதி அறிவிப்பு..

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு நடத்தப்படும் என மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 

NEET SS 2022: NEET Exam Date announcement for Super Specialty Medical Courses

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு நடத்தப்படும் என மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.நாட்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனப்படும் தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வானது தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படுகிறது.   இளங்கலை மருத்துவ படிப்பு  மட்டுமின்றி, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ படிப்பு என அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 

மேலும் படிக்க:சென்னை ஐஐடி(IIT) நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து 4-வது ஆண்டாக தேர்வு

மருத்து படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு  ஜூன் 17,18 ஆகிய தேதிகளில் நடத்தபப்டும் என்று என்டிஏ- வால் அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாகவும் தேர்வு தேதி  தள்ளி வைக்கப்படுவதாகவும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்தது.மேலும் https://natboard.edu.in/ எனும் இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க:இளநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET தேர்வு தொடங்கியது.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்தான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றூ தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது  உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி வரும் செப்டம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வு நடத்தப்படும் என மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios