இளநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET தேர்வு தொடங்கியது.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..

நாடு முழுவதும் 90 உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான CUET தேர்வு தொடங்கியது. மேலும் 500 நகரங்களில் நடக்கும் சியுஇடி முதற்கட்ட தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் 90 உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான CUET தேர்வு தொடங்கியது. மேலும் 500 நகரங்களில் நடக்கும் சியுஇடி முதற்கட்ட தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர்.
 

CUET UG 2022 Exam started from today.. Full details here

நாடு முழுவதும் 90 உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான CUET தேர்வு தொடங்கியது. மேலும் 500 நகரங்களில் நடக்கும் சியுஇடி முதற்கட்ட தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர்.முன்னதாக மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு முதல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வரும் ஜூலை 15 முதல் ஆக.10-ம் தேதி வரை சியுஇடி தேர்வு நடைபெறும் என்று முன்னதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன்படி 90 உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான CUET தேர்வு இன்று தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க:145 நாளுக்கு பின் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா.. 2 வது நாளாக 20,038 பேருக்கு பாதிப்பு..

இந்த தேர்வானது என்டிஏ மூலம் கணினி வழியில் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தபடுகிறது. மேலும் இளநிலை சியுஇடி தேர்விற்கு இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. சியுஇடி தேர்விற்கு சுமார் 9.50 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  மேலும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சியுஇடி எனும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த 56 மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், 30 தனியார் பல்கலைக்கழகங்கள் என 86 உயர்கல்வி நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:கேரளாவை சேர்ந்த ஒருக்கு குரங்கு அம்மை... தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!!

நாடு முழுவதும் 500 நகரங்களில் நடக்கும் சியுஇடி முதற்கட்ட தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர். அதன் படி, ஜூலை 15 முதல் 20-ம் தேதி வரை முதல் கட்ட தேர்வும் ஆகஸ்ட் 4 முதல் 10 ம் தேதி வரை இரண்டாம் கட்ட தேர்வு நடக்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர 2022-23 கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி) கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:பொன்னையன் முன்பை போல் இல்லை..! பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார்-சீறிய துரைமுருகன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios