Asianet News TamilAsianet News Tamil

145 நாளுக்கு பின் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா.. 2 வது நாளாக 20,038 பேருக்கு பாதிப்பு..

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 20,139 ஆக இருந்த நிலையில், இன்று 20,038 ஆக அதிகரித்துள்ளது. 
 

India corona case today - 20,038 corona positive case last 24 hrs
Author
India, First Published Jul 15, 2022, 10:20 AM IST

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 20,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 20,038 ஆக அதிகரித்துள்ள்து. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,10,024 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:முதல்வரை தொடர்ந்து அமைச்சரை விரட்டி விரட்டி தாக்கும் கொரோனா.. அதிர்ச்சியில் உ.பி.க்கள்..!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 16,994 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,30,45,350ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,39,073 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா… ஒரே நாளில் 2,283 பேருக்கு தொற்று!!

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை  5,25,604 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம்  1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.31 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.49 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 199.47 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில்18,92,969 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதி..! நுரையீரல் பாதிப்பு எப்படி உள்ளது..? சிடி ஸ்கேன் முடிவு இதோ...

Follow Us:
Download App:
  • android
  • ios