NIRF ranking: iit madras ranking: சென்னை ஐஐடி(IIT) சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து 4-வது ஆண்டாக தேர்வு

நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக, சென்னை ஐஐடி உயர் கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

IIT Madras bagged the top spot among educational institutions in the country

நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியில் தொடர்ந்து 4-வது ஆண்டாக, சென்னை ஐஐடி உயர் கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐஐடி மெட்ராஸ் என்று அழைக்கப்படும் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் தொடர்ந்து 4-வது ஆண்டாக, சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

IIT Madras bagged the top spot among educational institutions in the country

ரூபாய் மதிப்புச் சரிவு மார்க்கதர்ஷக் மண்டல் வயதைக் கடந்துவிட்டது: காங்கிரஸ் கட்சி கிண்டல்

தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.

அதில், சென்னை ஐஐடி கல்வி நிறுவனம், ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியல் கல்லூரிகள் பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்தது. 2-வது இடத்தில் டெல்லி ஐஐடியும், மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. 

பல்கலைக்கழகங்கள்

பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சயின்ஸ்(IISC) முதலிடத்தைப் பிடித்தது. இதில் பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

IIT Madras bagged the top spot among educational institutions in the country

இஸ்ரேல் ஹைபா துறைமுகம்: 120 கோடி டாலருக்கு வாங்கியது அதானி குழுமம்

பெங்களூரு ஐஐஎஸ்சியைத் தொடர்ந்து 2-வது இடத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும், அதைத் தொடர்ந்து டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழமும் இடம் பெற்றுள்ளன. 

ஃபார்மசி கல்வி நிறுவனங்கள்

ஃபார்மஸி படிப்புகளைப் பொறுத்தவரை டெல்லியில் உள்ள ஜாமியா ஹம்தாரத் பல்கலைக்கழகம் முதலிடத்திலும், ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பார்மாசூட்டிகல் எஜூகேஷன் அன்ட் ரிசார்ஜ் 2வது இடத்திலும் உள்ளன. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் 3வது இடத்தில் உள்ளது.

10 சிறந்த கல்லூரிகளில் டெல்லியைச் சேர்ந்த 5 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளந. இதில் மிராண்டா ஹவுஸ் முதலிடத்தில் உள்ளது. இந்து கல்லூரி 2-வது இடத்திலும், சென்னை பிரசிடென்ஸி கல்லூரி 3-வது இடத்திலும் உள்ளனன.

பெட்ரோல், டீசல் விலை திடீர் குறைப்பு: மகாராஷ்டிரா பாஜக அரசு அதிரடி

மருத்துவக் கல்லூரிக்கான தரவரிசையில் சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் முதலிடத்திலும், வேலூர் சிஎம்சி 2வது இடத்திலும் உள்ளன. சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் அகமதாபாத்ஐஐஎம் முதலிடத்திலும், பெங்களூரு ஐஐஎம் 2வது இடத்திலும், கொல்கத்தா ஐஐஎம் 3வது இடத்திலும் உள்ளன

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios