நீட் தேர்வு எழுதிய மாணவிகளை உள்ளாடைகளை பரிசோதனை செய்த சம்பவம், அவர்களின் ஆடையை மாற்ற சொன்னதாகவும் புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், நீட் தேர்வு நடைபெறும் போதும், மாணவிகளின் உள்ளாடைகளை பரிசோதனை செய்வது அல்லது உள்ளாடைகளை கழற்ற சொல்வது போண்ற பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்விலும், சென்னையில் மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்னதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் நடந்த சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நேற்று முன் தினம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற சில விண்ணப்பதாரர்கள், தங்கள் ஆடைகளை கழற்றுமாறு அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளனர்.. சிலர் தங்கள் பெற்றோருடன் ஆடைகளை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : எந்த சிறப்பு வகுப்பும் இல்லை.. யூ டியூப் வீடியோ மூலம் 2 ரயில்வே வேலைகளை பெற்ற இளைஞர்..
தேசிய தேர்வு முகமையின் ஆடை குறியீட்டிற்கு இணங்க, சில மாணவர்கள் அருகிலுள்ள கடைகளில் புதிய ஆடைகளை வாங்கி அணிந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவங்களை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர், தங்கள் உள்ளாடைகள் சோதனை செய்ததாவும், ஒரு தேர்வு மையத்தில் இருந்த ஒரு பெண் தனது குர்தாவை கழற்றிய பின் அதனை மாற்றி அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பெற்றோர் “ தேர்வு முடிந்து வெளியே வந்து எங்கள் மகள் சொன்னபோதுதான் எங்களுக்கு விஷயம் தெரிந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுக்கு முன் மாணவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது முக்கியம். முக்கியமான தேர்வுக்கு வரும் ஒரு மாணவர் இந்தச் செயலால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்..” என்று தெரிவித்தனர்.
மேலும், மேற்குவங்க மாநிலத்தில் ஒரு நீட் தேர்வு மையத்தில் மையத்தில் தேர்வெழுதிய ஒரு விண்ணப்பதாரர் தனது அனுபவத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். தங்கள் ஆடைகளை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறி உள்ளார்.
சில மாணவர்கள் வெறும் உள் ஆடையுடன் தேர்வு அறைக்குள் சென்றதாகவும் அந்த மாணவி குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் இதுபோன்ற நிகழ்வுகளை அந்த மையத்தின் முதல்வர் நிராகரிக்கிறார். சில மாணவர்கள் ஆடைக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை என்றும், எனவே அவர்களின் உடையை மாற்றுமாறும் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். ஆரம்ப வகுப்பு, பயிற்சி பெறாத ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக எடுத்துக் கொள்ளப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று பெற்றோர் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, NTA, தேர்வு மைய ஊழியர்களுக்கு "விரிவான வழிமுறைகளை" வழங்குவதாக அறிவித்தது, பெண் விண்ணப்பதாரர்களை சோதனையிடும் நுட்பமான தன்மை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்தது.
இதையும் படிங்க : சிறுவனின் காயத்திற்கு ஃபெவிகுவிக் போட்டு சிகிச்சை அளித்த மருத்துவர்.. அதிர்ந்து போன பெற்றோர்..
