எந்த சிறப்பு வகுப்பும் இல்லை.. யூ டியூப் வீடியோ மூலம் 2 ரயில்வே வேலைகளை பெற்ற இளைஞர்..

ஆந்திராவை சேர்ந்த 27 வயது இளைஞர் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் இரண்டு ரயில்வே வேலைகளைப் பெற்றுள்ளார்.

No special class.. Youth got 2 railway jobs through YouTube video..

வளங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நன்மைகள் கிடைக்கும் என்பதற்கு போந்தா திருப்பதி ரெட்டியின் கதை மிகப்பெரிய உதாரணம். ஆம். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள போசுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் இரண்டு ரயில்வே வேலைகளைப் பெற்றுள்ளார்.

தனது குடும்பத்தின் பொருளாதார நிலை அவரை, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு அவரைத் தூண்டியது. யூ டியூப் தளத்தில் பல்வேறு சேனல்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பொது அறிவு (ஜி.கே), பகுத்தறிவு மற்றும் பிற பாடங்கள் குறித்த வீடியோக்களை அவர் பார்த்தார்.

இதையும் படிங்க : சிறுவனின் காயத்திற்கு ஃபெவிகுவிக் போட்டு சிகிச்சை அளித்த மருத்துவர்.. அதிர்ந்து போன பெற்றோர்..

கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளில் இளங்கலை முடித்த பிறகு போந்தா, திருப்பதி ரயில்வே வாரிய தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார். ஒரே மகனாக இருந்ததால், திருப்பதி தனது தந்தையான பி சின்ன கொண்டா ரெட்டிக்கு தனது விவசாயத் துறையில் தவறாமல் உதவுவதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர், அவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த சூழலில் யூ டியூப் வீடியோ மூலம் 2 ரயில்வே வேலைகளை அவர் பெற்றுள்ளார். தென் மேற்கு ரயில்வேயில் (SWR)-பெங்களூரு பிரிவில் கிரேடு-4 உதவியாளராகவும், டிக்கெட் எழுத்தராகவும் (CCTC) இரண்டு வேலைகளைப் பெற்றார். இதுகுறித்து பேசிய அவர் "இந்த மாத இறுதிக்குள் நியமனக் கடிதத்தை எதிர்பார்க்கிறேன். எனது குடும்பத்தின் பொருளாதார நிலை சரியில்லாததால் நான் சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல விரும்பவில்லை. மேலும், எனது தந்தையை அனைத்து விவசாய வேலைகளையும் தனியாக செய்ய விட விரும்பவில்லை. எனவே, எனது கிராமத்தில் எனது குடும்பத்தினருடன் தங்கி தேர்வுக்கு தயார் செய்ய முடிவு செய்தேன்,” என்று கூறினர்.

வீட்டில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், தோட்டத்துக்கு அருகில் உள்ள சிவாலயத்தில் புத்தகங்களை வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய திருப்பதி ரெட்டி “ மொபைல் நெட்வொர்க் நன்றாக இருப்பதால், கோவில் எனது படிப்பு மூலையாகவும் உள்ளது.

நான் முதல் முறையாக 2019-ல் ரயில்வே தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்தேன். எனது இரண்டாவது முயற்சியில், SWR-Bangalore இல் கிரேடு-4 உதவியாளராக வேலை கிடைத்தது. ‘wifistudy’ என்ற யூடியூப் சேனல் பெரும்பாலான பயிற்சிகளுக்கு எனக்கு உதவியது. சாஹில் சார், தீபக் சார் மற்றும் நீரஜ் சார் ஆகியோர் எனக்கு கணிதம், பகுத்தறிவு மற்றும் ஜிகே போன்றவற்றில் உதவினர்,” என்று தெரிவித்தார்.

தனது அன்றாடப் பணிகளைப் பற்றி விரிவாகப் பேசிய அவர்  "நான் 10-12 மணி நேரம் படித்து, இரவு 7 மணி முதல் 11 மணி வரை யூடியூப்பில் பாடம் எடுத்து, சொந்தக் குறிப்புகளைத் தயார் செய்தேன். வேலையில் சேர்ந்த பிறகு, கிராமப்புற மற்றும் ஏழை குடும்பப் பின்னணியில் இருந்து வரும் மற்ற இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்..” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : சாதம் இல்லாமல் குழம்பு மட்டும் சமைத்த மனைவியை கொலை செய்த கொடூர கணவன்.. அதிர்ச்சி சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios