நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! மாணவர்கள் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

NEET 2023 Registrations Reopen Today on neet.nta.nic.in, How To Apply

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (யுஜி) தேர்வுக்கு கூடுதல் அவகாசம் வழங்கி தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2023-24ஆம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நேரடி முறையில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம் இந்தி உள்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி முடிந்தது.

ஆனால், இன்னும் பல மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு தேசிய தேர்வுகள் முகமைக்கு கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தேசிய தேர்வுகள் முகமை, நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவுக்கான காலக்கெடுவை ஏப்ரல் 13ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

பந்திப்பூர் காட்டில் பிரதமர் மோடியுடன் பயணித்த தமிழர்! என்ன சொன்னார் தெரியுமா?

NEET 2023 Registrations Reopen Today on neet.nta.nic.in, How To Apply

மருத்துவப் படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது பற்றிய கூடுதல் தகவல்களை தேசிய தேர்வு முகமையின் https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

தொலைப்பேசி வழியில் உதவி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் சந்தேகங்களுக்குத் தெளிவு பெறலாம் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நீட் (NEET) தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வு முதுநிலை மற்றும் இளநிலை படிப்புகளுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது.

ஊசி முனை அளவு நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க விடமாட்டோம்: சீனாவுக்கு அமித் ஷா கண்டனம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios