தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சியான பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.தாகூர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உத்தரவில், நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும். புதிய கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை 2017 ஏப்ரல் மாதத்துக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் எந்த மதுபான கடைகளும் இயங்கக் கூடாது என்றும், புதிதாக திறக்க அனுமதியும் வழங்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, தேசிய நெடுஞ்சாலைக்கு 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்றும், இது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கவும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பாமக சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
