நீங்கள் நூறு முறை பிரதமராகுங்கள்; எங்களது கவலையே மக்கள்தான்: அதிர் ரஞ்சன் பேச்சுக்கு பாஜக கடுமையான எதிர்ப்பு!!

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கான லோக்சபா தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.  பிரதமர் மோடியும் அவையில் கலந்து கொண்டுள்ளார்.

 Narendra Modi became the PM 100 times our concern is people: Adhir Chowdhury

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று பேசி இருந்தார். அவரது பேச்சு அவையில் காரசார விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. இவரைத் தொடர்ந்து பேசி இருந்த அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானி கடுமையாக காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் சாடிப் பேசி இருந்தார்.

''ஊழலில் திளைக்கும் திமுக கட்சியுடன் தானே நீங்கள் கூட்டணி வைத்து இருக்கிறீர்கள்'' என்று ஸ்ம்ருதி கேள்வி எழுப்பி இருந்தார். இதைத்தொடர்த்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பேசி இருந்தனர். நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி இருந்தார். அனைத்து நடவடிக்கைகளையும் மணிப்பூர் விஷயத்தில் எடுத்து வருவதாகவும், நாடாளுமன்றம் துவங்குவதற்கு முன்பு ஏன் மணிப்பூர் விவகார வீடியோவை வெளியிட வேண்டும். ஏன் போலீசில் ஒப்படைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், தன்னிடம் பிரதமர் மோடி இரவு இரண்டு மணிக்கும், அதிகாலையும் மணிப்பூர் விஷயம் குறித்து பேசி இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

ஜெயலலிதா சேலையை இழுத்த கட்சிதான் திமுக: மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு!

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சிக்கான லோக் சபா தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசி வருகிறார். இவர் தனது பேச்சில், ''நம்பிக்கையில்லா தீர்மானம என்பது மிகவும் சக்திவாய்ந்த கருவி. 
பிரதமர் மோடியை நாடாளுமன்றத்திற்கு இந்த தீர்மானம் வரவழைத்து இருக்கிறது. இல்லையென்றால் அவர் தனது குகையில் மறைந்திருப்பார். இந்த தீர்மானம் கொண்டு வர நாங்கள் நினைக்கவில்லை, எந்த திட்டமும் இல்லை. ஆனால் இந்த ஆயுதத்தை பயன்படுத்த பிரதமர் மோடி எங்களை வற்புறுத்தினார்.

நாங்கள் பிரதமரிடம் சொல்ல விரும்புகிறோம். நீங்கள் நூறு முறை பிரதமராகுங்கள். எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேசத்தின் சாமானிய மக்களைப் பற்றி மட்டுமே நாங்கள் கவலைப்படுகிறோம்'' என்றார்.

''நீங்கள் மணிப்பூரைப் பற்றிப் பேசும்போது, மற்ற மாநிலங்களும் இணைந்து கொண்டன. மணிப்பூர் பிரச்சினை பெரிய பிரச்சினை. அதை கட்டுப்படுத்த முடியாது. இது உலகளாவிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. மன் கி பாத் பேச வேண்டுமானால் நீங்கள் மணிப்பூர் மக்களுடன்தான் பேச வேண்டும். இந்தியாவை விட்டு வகுப்புவாதம் வெளியேற வேண்டும்,  இந்தியாவை விட்டு மதவாதம் வெளியேற வேண்டும், காவிமயமாக்கல் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்'' என்று அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். 

மேலும் தொடர்ந்து பேசிய ரஞ்சன் பிரதமர் மோடியை இந்து இதிகாசமான மகாபாரதத்தின் பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுடன் இணைத்துப் பேசினார். அதே போல் தப்பியோடிய நிரவ் மோடியுடனும் பேசினார். இதனால் அவையில் சல சலப்பு ஏற்பட்டது. 

மணிப்பூரில் மற்றொரு கொடுமை! தீ வைக்கப்பட்ட வீடு... தப்பி ஓடிய பெண்ணை இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios