Asianet News TamilAsianet News Tamil

சத்ரபதி சிவாஜி என்பது வெறும் பெயர் அல்ல, தெய்வம்: மன்னிப்பு கோரினார் மோடி; காரணம் என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சிவாஜியின் சிலை கீழே விழுந்து சேதமடைந்ததற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார்.

narendra modi apology on shivaji statue collapse in maharashtra vel
Author
First Published Aug 30, 2024, 6:14 PM IST | Last Updated Aug 30, 2024, 6:47 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் இருந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி திறந்து வைத்தார். கடற்படை தினத்தை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்ட 35 அடி உயர சிலையானது தொடர் கனமழை மற்றும் காற்றின் காரணமாக கடந்த 26ம் தேதி கீழே விழுந்து நொறுங்கியது. திறக்க ஓராண்டுக்குள் சிலை உடைந்து விழுந்ததால் பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

பொய் சொல்றதுல திமுக ஐடி விங்கையே மிஞ்சிட்டீங்க; சபாநாயகருக்கு எதிராக எஸ்ஆர் சேகர் ஆவேசம்

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், “கடந்த 2013ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக என்னை நியமித்த போது சத்ரபதி சிவாஜி மகாராஜின் சமாதி முன்பாக அமர்ந்து எனது பயணத்தைத் தொடங்கினேன். சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது எங்களுக்கு வெறும் பெயர் மட்டுமல்ல தெய்வம். சிலை இடிந்து விழுந்ததற்கு நான் கடவுளாக மதிக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

Russia Ukraine War | ரஷ்யா-உக்ரைன் போரில் சமாதான தூதுவரான பிரதமர் மோடி!

இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்களைப் பொறுத்தவரை தெய்வத்தை விடவும் உயர்ந்தது எதுவும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார். இந்த சிலை மராட்டிய கடற்படை மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆகியோரின் பாரம்பரியத்தை கடல்சார் பாதுகாப்பு மற்றும் நவீன இந்திய கடற்படையுடன் உள்ள வரலாற்று தொடர்பை கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios