World’s richest beggar : உலகத்திலேயே இவர் தான் பணக்கார பிச்சைக்காரன்..? வாய் பிளக்கவைக்கும் சொத்து மதிப்பு!
பாரத் ஜெயின், மும்பையின் நெரிசலான வீதிகளில் இன்றளவும் இவர் பிச்சை எடுப்பதை நம்மால் காண முடியும். ஆனால் இவர் தான் உலகத்திலேயே மிக பெரிய பணக்கார பிச்சைக்காரர்

ஓடி ஓடி உழைத்து, வாரம் ஆறு நாள் கஷ்டப்பட்டு உழைக்கும் பலராலும் கூட மாதம் முழுசாய் ஆயிரம் ரூபாய் சேர்த்து வைக்க முடியவில்லை. ஆனால் "பிச்சை எடுத்து பங்களா கட்டி உள்ளார்" என்று விளையாட்டாய் கூறுவது போல, பிச்சை எடுப்பதையே தனது தொழிலாக கொண்டுள்ள மும்பையை சேர்ந்த ஒருவர் சுமார் 7.5 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ள தகவல் பலரை வாய் பிளக்க வைத்துள்ளது.
பாரத் ஜெயின், மும்பையின் நெரிசலான வீதிகளில் இன்றளவும் இவர் பிச்சை எடுப்பதை நம்மால் காண முடியும். ஆனால் இவர் தான் உலகத்திலேயே மிக பெரிய பணக்கார பிச்சைக்காரர் என்று அழைக்கப்படுகிறார். பிச்சைக்காரர்கள் என்றாலே வறுமையும், நிதி நெருக்கடியை சந்திக்கும் ஒரு மனிதனாகவும், கிழிந்த ஆடைகளையும், அழுக்கான தேகத்தையும் கொண்டவர் என்கின்ற எண்ணம் தான் நம் கண் முன் முதலே வரும்.
ஆனால் பாரத் ஜெயின் நிலைமையே வேறு, பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி இவருடைய மாத வருமானம் சுமார் 60,000 முதல் 75,000 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. சுமார் 1.5 கோடி மதிப்புள்ள 2BHK பிளாட் ஒன்று இவருக்கு மும்பையில் சொந்தமாக உள்ளது. தானே பகுதியில் இவருக்கு சொந்தமாக இரண்டு கடைகள் உள்ளது, அதன் வாடகையாக மட்டுமே மாதம் 30,000 ரூபாய் இவருக்கு வருகின்றது.
இதையும் படியுங்கள் : அடுத்த அதிர்ச்சி.. ஹைதராபாத் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.!
மும்பையின் பிரதான பகுதியாக திகழும் சத்ரபதி சிவாஜி மகாராஜா ரயில்வே நிலையத்தில் தான் இவர் அதிக அளவில் பிச்சை எடுப்பாராம். இன்றளவும் பிச்சை எடுத்து வரும் இவர் ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்கிறார், மக்களின் அனுதாபத்திற்கு நன்றி சொல்லி உள்ள ஜெயின், ஒரு நாளைக்கு சுமார் 2000 முதல் 2500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
ஜெயின் தனது மனைவி, இரண்டு குழந்தைகள், அண்ணன் மற்றும் தந்தையுடன் Parel நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தான் குடி இருக்கிறார். அவருடைய குழந்தைகள் கான்வென்ட்டில் படித்து, தற்பொழுது பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர். இவருடைய மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஒரு மளிகை கடை வைத்து அதை நடத்தி வருகின்றனர்.
அவருடைய குடும்பத்தினர் இவரை பிச்சை எடுக்க வேண்டாம் என்று பலமுறை கூறியும் அவர் தொடர்ந்து அதில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : பிரதமர் வேட்பாளர்: நிதிஷ்குமாரின் கனவை கலைக்கும் லாலு பிரசாத்!