Asianet News TamilAsianet News Tamil

செல்லாத ஓட்டுக்களைப் பதிவு செய்த எம்.பி.க்கள்... 

mps votes not valid for president election
mps votes not valid for president election
Author
First Published Jul 20, 2017, 6:12 PM IST


இன்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது 21 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் 4,120 எம்.எல்.ஏ.க்களும், 7776 எம்.பி.க்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். சுமார் 99 சதவீத வாக்குகள் பதிவாகின. 

இதனை அடுத்து பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று நாடாளுமன்றத்தின் முதல் மாடியில் எண்ணப்பட்டு முடிவில் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைடுத்து ராம்நாத் கோவிந்த் 14-வது குடியரசு தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது 21 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதை அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு செல்லாத வாக்களித்த எம்.பி.க்கள் யார்? என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios