புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நாகப்பாம்பு குட்டிகளும், 20 பாம்பு முட்டைகள் மற்றும் 2 நாகப்பாம்புகளும் கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஒடிசா மாநிலம் பதாட்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த பைகாஷி கிராமத்தில் உள்ள ஒரு மண் வீட்டில் பாம்புகள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டில் இருந்த தொட்டியில் பார்த்த போது  111 நாகப்பாம்பு குட்டிகளும், 2 நாகப்பாம்புகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாம்புகளை மீட்ட அதிகாரிகள் காட்டுப்பகுதியில் விட்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.