வாசனைப் பெண் மோனிகா கர்தேவை, பிளாக்மெயில் செய்வதற்காக நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும், இதில் மோனிகா கொலை செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் சிங் போலீசில் கூறியுள்ளான்.

வாசனை திரவியம் தயாரித்து சர்வதேச அளவில் விற்பனை செய்து வந்தவர் மோனிகா கர்தே (39). கோவா மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், கடந்த 6 ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

மோனிகா கர்தே, கடந்த 2009 - 2011 ஆம் ண்டு வரை சென்னையில், வாசனை திரவியம் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். தற்போது கணவரை பிரிந்த இவர், கோவா தலைநகர் பனாஜி அருகே ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் வீட்டில் கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பனாஜி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பெங்களூருவில் ராஜ்குமார் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜ்குமார் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் , முன்னதாக ராஜ்குமார் மும்பையில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளான். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கோவாவில் உள்ள பனாஜிக்கு வந்துள்ளான் ராஜ்குமார் சிங்.